கோடை விடுமுறையில் பள்ளிக் குழந்தைகளுக்கு ஜப்பானிய மொழி பயிற்சி அளிக்க இந்திய - ஜப்பான் தொழில் வர்த்தக சபை சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக, அதன் பொதுச்செயலாளர் சுகுணா ராமமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய - ஜப்பான் தொழில் வர்த்தக சபையின் மொழிப் பள்ளி, பள்ளி குழந்தைகளுக்கான ஜப்பான் மொழி பயிற்சியைத் தொடங்க உள்ளது. மொத்தம் 40 மணி நேரம் கொண்ட இந்த பயிற்சியில் 8 முதல் 17 வயது வரையுள்ள குழந்தைகள் சேரலாம்.
இந்த பயிற்சியானது, ஜப்பானிய மொழி பேச்சுப் பயிற்சி, ஜப்பானிய குழந்தைகளிடமிருந்து பாடங்களை அறிந்து கொள்வது, ஜப்பானிய மொழி எழுதுவது, பாடல்கள் படிப்பது, ஓரிகாமி, ஜப்பானிய விளையாட்டுகள் போன்றவை இடம்பெறும்.இதற்கான நேரடி வகுப்புகள் சென்னை - தேனாம்பேட்டை கே.பி.தாசன் சாலையில் அமைந்துள்ள இந்திய - ஜப்பான் தொழில் வர்த்தக சபை வளாகத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை நடைபெறும். வகுப்புகள் ஏப்ரல் மாதம் தொடங்குகின்றன. பயிற்சியின் நிறைவில் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்
இணையவழி பயிற்சி திட்டம்:
மேலும், இணைவழியில் ஜப்பானிய மொழி வகுப்பு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேருவோருக்கு ஜப்பானிய மொழி மட்டுமின்றி ஜப்பானிய கலை, கலாச்சாரம், வணிக நடைமுறைகள் ஆகியவையும் கற்றுத் தரப்படும்.
இந்த வகுப்பு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. இப்பயிற்சியானது, டிசம்பர் மாதம் ஜப்பான் ஃபவுண்டேஷன் சார்பில் நடத்தப்பட உள்ள ‘ஜெஎல்பிடி என்-5 லெவல்’ தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். இந்த இணையவழி பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் 98842-00505, 73055-99874 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், www.ijcci.com என்ற இணையதளத்திலும் விவரங்களை அறியலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி