திருச்சியில் விஜய் பிரச்சாரத்தால் பள்ளி அருகே இடையூறு: 10-ம் வகுப்பு தேர்வு எழுத 30 நிமிடங்கள் கூடுதல் அவகாசம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 3, 2026

திருச்சியில் விஜய் பிரச்சாரத்தால் பள்ளி அருகே இடையூறு: 10-ம் வகுப்பு தேர்வு எழுத 30 நிமிடங்கள் கூடுதல் அவகாசம்

 


திருச்​சி​யில் தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரத்​தால் இடையூறு ஏற்​பட்​ட​தால், அதன் அரு​கில் இருந்த அரசுப் பள்​ளி​யில் 10-ம் வகுப்பு பொதுத்​தேர்வு எழு​திய மாணவர்​களுக்கு கூடு​தலாக 30 நிமிடங்​கள் அவகாசம் வழங்​கப்​பட்​டது.

திருச்சி கிழக்கு தொகு​தி​யில் போட்​டி​யிடு​வதற்​காக தவெக தலை​வர் விஜய், பாலக்​கரை பழைய மதுரை சாலை​யில் உள்ள மாநக​ராட்சி 2-வது மண்டல அலு​வல​கத்​தில் நேற்று வேட்​புமனு தாக்​கல் செய்​தார்.

பின்​னர், அதன் அரு​கில் உள்ள மரக்​கடை எம்​ஜிஆர் சிலை பகு​தி​யில் பிற்​பகல் 12.30 மணி​யள​வில் வேனில் இருந்​த​வாறு பிரச்​சா​ரம் செய்​தார். இதற்​காக நேற்று காலை முதலே ஆயிரக்​கணக்​கான தொண்​டர்​கள் அங்கு திரண்டு கூச்​சலிட்​டுக் கொண்​டிருந்​தனர்.

விஜய் பிரச்​சா​ரம் செய்த இடம் அருகே சையது முர்​துஷா அரசு மேல்​நிலைப்​பள்ளி உள்​ளது. இப்​பள்​ளி​யில் 10-ம் வகுப்பு மாணவர்​கள் 170 பேர் நேற்று பொதுத்​தேர்வு எழு​தினர். இத்​தேர்​வுக்கு இடையூறு ஏற்​படக்​கூ​டாது என்​ப​தற்​காக விஜய் வரு​கைக்கு முன்​ன​தாக ஸ்பீக்​கர் பயன்​படுத்​தக்​கூ​டாது என போலீ​ஸார் அறி​வுறுத்​தி​யிருந்​தனர்.

அதேவேளை​யில், விஜய் அங்கு பிரச்​சா​ரத்​துக்​காக வந்​த​ போது ஸ்பீக்​கர் மூலம் தவெக பிரச்​சா​ரப் பாடல் ஒலிபரப்​பப்​பட்​டது. விஜய் அங்கு சுமார் 20 நிமிடங்கள் பிரச்சாரம் செய்​து​விட்டு பிற்​பகல் 1 மணி​யள​வில் அங்​கிருந்து புறப்​பட்​டுச் சென்​றார். இதனால் 10-ம் வகுப்பு தேர்வு எழு​திய மாணவர்​களுக்கு இடையூறு ஏற்​பட்​டது.

இதையடுத்​து, மாவட்ட தேர்​தல் நடத்​தும் அலு​வலரும், மாவட்ட ஆட்​சி​யரு​மான வே.சர​வணனிடம் மாவட்ட முதன்மை கல்வி அலு​வலர் கிருஷ்ணப்​பிரியா அனு​மதி பெற்று அந்​தப் பள்​ளி​யில் 10-ம் வகுப்பு தேர்வு எழு​திய மாணவர்​களுக்கு மட்​டும் கூடு​தலாக 30 நிமிடம் தேர்வு எழுத சிறப்பு அனு​மதி வழங்​கி​னார். இதையடுத்து பிற்​பகல் 1.15 மணிக்கு முடிய வேண்​டிய தேர்வு 1.45க்குதான் முடிந்​தது.

1 comment:

  1. அடுத்தவங்கள தொல்லை தருவதே வானரக்கூட்டத்தின் வேலையாக இருக்கு....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி