‘டெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க 10 நாள் கால அவகாசம்: டிஆர்பி-க்கு ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 13, 2026

‘டெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க 10 நாள் கால அவகாசம்: டிஆர்பி-க்கு ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள்

 

பணிச்​சான்​றிதழ் பெறு​வ​தில் தொடர் தாமதம் ஏற்​பட்​டுள்​ள​தால் டெட் தேர்​வுக்கு விண்​ணப்​பிக்க பணி​யில் உள்ள ஆசிரியர்​களுக்கு 10 நாள் காலஅவகாசம் வழங்க வேண்​டு​கோள் விடுத்​துள்​ளது.

இது தொடர்​பாக தமிழ்​நாடு பட்​ட​தாரி ஆசிரியர் கூட்​டமைப்​பின் பொதுச்​செய​லா​ளர் பி.பேட்​ரிக் ரெய்​மாண்ட் ஆசிரியர் தேர்வு வாரி​யத்​தின் தலை​வருக்கு அனுப்​பி​யுள்ள மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: பணி​யில் உள்ள ஆசிரியர்​களுக்​காக நடத்​தப்பட உள்ள சிறப்பு ஆசிரியர் தகு​தித் தேர்​வுக்கு ஆன்​லைனில் விண்​ணப்​பிப்​ப​தற்​கான கடைசி நாள் ஏப்​ரல் 10-ம் தேதி முடிவடைந்​து​விட்​டது.

தேர்​வுக்கு விண்​ணப்​பிக்​கத் தேவை​யான முக்​கிய ஆவணம் பணிச்​சான்று ஆகும். மாவட்ட கல்வி அலு​வலர்​கள் பிப்​ர​வரி மாதம் முதல் அரசு பொதுத்​தேர்வு பணி​யில் இருந்​த​தா​லும் தேர்​தல் பணி உள்​ளிட்ட பல்​வேறு காரணங்​களாலும் பணிச்​சான்​றிதழ் பெறு​வ​தில் தொடர் தாமதம் ஏற்​பட்​டுள்​ளது.

எனவே இதைக் கருத்​தில் கொண்டு டெட் தேர்​வுக்கு விண்​ணப்​பிப்​ப​தற்கு 10 நாள் கால நீட்​டிப்பு வழக்க ஆவன செய்​யு​மாறு கேட்​டுக்​கொள்​கிறேன் என்று அவர் கூறி​யுள்​ளார்.

ஜூலை முதல் வாரத்​தில் தேர்வு டெட் தேர்வு ஜூலை முதல் வாரத்​தில் நடை​பெறும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இடைநிலை ஆசிரியர்​களுக்​கான தாள்-1 ஜூலை 4-ம் தேதி​யும், பட்​ட​தாரி ஆசிரியர்​களுக்​கான தாள்-2 ஜூலை 4-ம் தேதி​யும் நடை​பெற உள்​ளன. இத்​தேர்வை 2 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் எழுது​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி