TNTEU தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் பொது அறிவிப்பு (Public Notice)
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைவுப்பெற்று இயங்கும் கல்வியியல் கல்லூரிகள் ஒருங்கிணைந்த 4 ஆண்டு (B.Sc.B.Ed & B.A.B.Ed) பட்டப்படிப்புகளில் 2026-2027-ஆம் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை செய்ய வழிவகை இல்லை எனத் தெரிவித்தல் சார்பு.
பார்வையில் குறிப்பிட்டுள்ளவாறு, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தால் கடந்த 12.09.2025 அன்று பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் National Council for Teacher Education (Recognition Norms and Procedure) Amendment Regulations, 2014 dated 25.01.2024 படியும், 03.07.2025 நாளிட்ட அரசு இதழ் அறிவிப்பின் மூலம் மேலும் திருத்தப்பட்டபடியும், ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி.,பி.எட் மற்றும் பி.ஏ.,பி.எட் (B.Sc.B.Ed & B.A.B.Ed) कन 2026-2027- का நிறுத்தப்பட்டதாகவும், மேலும் ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி.,பி.எட் மற்றும் பி.ஏ.,பி.எட் பட்டப்படிப்புகள் நடத்தும் எந்தவொரு கல்விநிறுவனமும் புதிய மாணவர் சேர்க்கை செய்ய அனுமதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்டுள்ள, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் 12.09.2025 அன்று பொது அறிவிப்பின் படி, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைவுப்பெற்று இயங்கும் கல்வியியல் கல்லூரிகளில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி., பி.எட் மற்றும் பி.ஏ.,பி.எட் (B.Sc.B.Ed & B.A.B.Ed) பட்டப்படிப்புகளில் 2026-2027-ஆம் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை செய்ய வழிவகை இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் விதிகளை மீறி மாணவர் சேர்க்கை செய்தால் இப்பல்கலைக்கழகம் எவ்விதத்திலும் பொருப்பெற்காது எனத் தெரிவிக்கலாகிறது

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி