ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளின் ஆசிரியர், காப்பாளர்களுக்கு டெட் தேர்ச்சி கட்டாயம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 5, 2026

ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளின் ஆசிரியர், காப்பாளர்களுக்கு டெட் தேர்ச்சி கட்டாயம்

 

ஆதி​தி​ரா​விடர் நலத் துறை ஆணை​யர் த.ஆனந்த், மாவட்ட அலு​வலர்​களுக்கு அனுப்​பிய சுற்​றறிக்கை விவரம்: உச்ச நீதி​மன்​றத் தீர்ப்​பின்​படி ஆதி​தி​ரா​விடர் நலத் துறை பள்​ளி, சமூக நீதி விடு​தி​களில் பணிபுரி​யும் ஆசிரியர்​கள், காப்​பாளர்​கள் 2 ஆண்​டு​களுக்​குள் ஆசிரியர் தகு​தித் தேர்​வில் (டெட்) தேர்ச்சி பெறவேண்​டும்.

5 ஆண்​டுக்​குள் ஓய்​வு​பெறும் ஆசிரியர்​களுக்கு இதில் விலக்கு அளிக்​கப்​பட்​டுள்​ளது. எனினும், பதவி உயர்வு பெறு​வதற்கு அனை​வரும் கட்​டா​யம் டெட் தேர்ச்சி பெற வேண்​டும். எனவே, தங்​களது மாவட்​டத்​தில் உள்ள ஆதி​தி​ரா​விடர் நலத் துறை பள்​ளி, சமூக நீதி விடு​தி​களில் பணிபுரி​யும் இடைநிலை ஆசிரியர்​கள், காப்​பாளர்​கள், பட்​ட​தாரி ஆசிரியர்​கள், தலைமை ஆசிரியர்​களில் டெட் தேர்ச்சி பெறாதவர்​களைக் கணக்​கெடுக்க வேண்​டும். ஜூலை​யில் நடை​பெற உள்ள டெட் தேர்​வுக்கு விண்​ணப்​பித்து தேர்ச்சி பெறு​மாறு அவர்​களை மாவட்ட அலு​வலர்​கள் அறி​வுறுத்த வேண்​டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி