மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 15, 2026

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவு

 

கல்வி மையங்​களில் மாணவர்​களின் பாது​காப்பை உறு​தி​செய்ய வேண்​டுமென கல்​லூரி​களுக்கு யுஜிசி உத்​தர​விட்​டுள்​ளது.

இதுகுறித்து பல்​கலைக்​கழக மானியக்​குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்​.ஜோஷி, அனைத்து வித​மான உயர்​கல்விநிறு​வனங்​களுக்கு அனுப்​பிய சுற்​றறிக்கை விவரம்: உயர்​கல்வி நிறுவனங்களில் ராகிங் தடுப்​பு, பணிபுரி​யும் பெண்​கள் மற்​றும் மாணவி​கள் மீதான பாலியல் துன்​புறுத்​தலைத் தடுக்க நடவடிக்​கை, குறைதீர்ப்​பாளர் நியமனம், கல்விக் கட்​ட​ணம் மற்​றும் அசல் சான்​றிதழ்​களை திரும்​பப் பெறு​தல் உள்​ளிட்ட வழி​காட்​டு​தல்​கள் தீவிர​மாகப் பின்​பற்​றப்பட வேண்​டும்.

குறிப்​பாக ராகிங் தடுப்​புக் குழு, குறைதீர்க்​கும் பிரிவு போன்ற பல்​வேறு குழுக்​கள் மற்​றும் பிரிவு​கள் அமைக்​கப்​படு​வதுடன், அவை திறம்பட செயல்​படு​வதை கல்​லூரி​கள் உறு​தி​செய்ய வேண்​டும். இந்​தக் குழுக்​கள் குறித்த விவரங்​களை உயர்​கல்வி நிறு​வனங்​கள் தங்​கள் இணை​யதளத்​தில் பதிவேற்ற வேண்​டும்.

இதுத​விர புகார்​கள் மற்​றும் குறை​களை குறிப்​பிட்ட காலக்கெடு​வுக்​குள் வெளிப்​படையான முறை​யில் சரிசெய்ய வேண்டும். மாணவர்​களுக்கு மனநல ஆலோ​சனை​கள் வழங்​குதலை மேம்​படுத்த வேண்​டும். சிசிடிவி கண்​காணிப்பு போன்ற வளாகப் பாது​காப்பு நடவடிக்​கைகளை உறு​தி​செய்ய வேண்​டும்.

இதுசார்ந்த அனைத்து துணைவேந்​தர்​களும் மேற்​கண்ட விதி​முறை​களைக் கண்​டிப்​பாகப் பின்​பற்​று​வதை உறு​தி​செய்​ய​வும் அறி​வுறுத்த வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி