பிளஸ்-2 முடித்த மாணவர்கள் அரசு திரைப்படக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 12, 2026

பிளஸ்-2 முடித்த மாணவர்கள் அரசு திரைப்படக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

பிளஸ்-2 முடித்த மாணவர்கள் சென்​னை​யில் உள்ள அரசு திரைப்​படக் கல்​லூரி​யில் சேர விண்​ணப்​பிக்​கலாம் என தமிழக அரசு அறி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக, தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழக அரசின் எம்​ஜிஆர் திரைப்​படம் மற்​றும் தொலைக்​காட்சி பயிற்சி நிறு​வனம் சென்னை தரமணி​யில் அமைந்​துள்​ளது.

இக்​கல்​லூரி​யில் ஒளிப்​ப​திவு, டிஜிட்​டல் இன்​டர்​மீடியட், ஒலிப்​ப​திவு, இயக்​கம் மற்​றும் திரைக்​கதை எழுதுதல், எடிட்​டிங், அனிமேஷன் மற்​றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகிய 6 பாடங்​களில் இளங்​கலை பட்​டப்​படிப்பு (பேச்​சிலர் ஆஃப் விஷுவல் ஆர்ட்​ஸ்) வழங்​கப்​படு​கிறது.

இப்​படிப்​பு​களில் வரும் கல்வி ஆண்​டில் (2026-27) சேரு​வதற்கு விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன.

மாணவர்​கள் இதற்​கான விண்​ணப்​பப் படிவம் மற்​றும் விளக்​கக் கையேட்டை www.filminstitute.tn.gov.in என்ற இணை​யதளத்​தில் மே 12 (இன்​று) முதல் பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம்.

பூர்த்தி செய்​யப்​பட்ட விண்​ணப்​பத்தை விண்​ணப்​பக் கட்​ட​ணம் மற்​றும் தேவை​யான ஆவணங்​களு​டன் ஜூன் 2-ம் தேதி மாலை 5 மணிக்​குள் ஆன்​லைனில் பதிவேற்​றம் செய்ய வேண்​டும். மேற்​கண்ட பட்​டப் படிப்​பு​களுக்கு விண்​ணப்​பிக்க பிளஸ்-2 முடித்​திருக்க வேண்​டும் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி