மத்திய அரசின் அழுத்தத்திற்கு அடிபணியமாட்டோம் - அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 19, 2026

மத்திய அரசின் அழுத்தத்திற்கு அடிபணியமாட்டோம் - அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

கடந்த இரு ஆண்டுகளாக கல்விக்கான நிதி வரவில்லை; மறைமுக அழுத்தத்திற்கு அடிபணியமாட்டோம்; கொள்கையில் என்றும் சமரசமில்லை

தமிழ்நாட்டிற்கு கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசின் கல்வி நிதி வந்து சேரவில்லை என குறிப்பிட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், இருமொழிக் கொள்கையில் ஒருபோதும் சமரசம் கிடையாது என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசின் கல்வி நிதி வந்து சேரவில்லை என குறிப்பிட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், இருமொழிக் கொள்கையில் ஒருபோதும் சமரசம் கிடையாது என தெரிவித்துள்ளார்.

சென்னையில் பேட்டியளித்த அவர், மத்திய அரசின் எந்த அழுத்தத்திற்கும் அடிபணிய மாட்டோம் என்றார்.

மேலும், பள்ளி வாகனங்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை என்றால் அரசு, தனியார் என யாராக இருந்தாலும் ஏற்க முடியாது என எச்சரித்த அவர், மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரத்தில் சமரசம் செய்ய மாட்டோம் என்றார்.

 ஆசிரியர்கள் பிரச்சனைகளை பேசி தீர்வு காணப்படும் என்றும் ராஜ்மோகன் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி