இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 11, 2026

இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

 

இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு /நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்துப்பாட பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் (31.05.2026 அன்றைய நிலவரப்படி) இடைநிலை ஆசிரியர்களின் நிரப்பத்தகுந்த காலிப்பணியிட விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 20.05.2026க்குள் சி3 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கு (c3supdtdse@gmail.com) அனுப்பி வைக்குமாறும் அதன் நகலினை முதன்மைக் கல்வி அலுவலர் கையொப்பத்துடன் விரைவு அஞ்சலில் அனுப்பி வைத்திடவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.


மேலும் காலிப் பணியிட விவரங்களை அனுப்பும்போது 01.08.2025 2 (Surplus Post Without Person) எனக் கண்டறிந்து (நாளது தேதியில்) இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு ஒப்படைக்கப்படும் பணியிடங்களை எக்காரணத்தைக் கொண்டும் காலிப்பணியிடங்களாகக் கொண்டு வருதல் கூடாது என்றும் கூடுதல் தேவையுள்ள (Addl. Need Post) பள்ளிகளின் பெயர்களையும் காலிப் பணியிடங்களாகக் கருதக்கூடாது என்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.


மேலும், காலிப்பணியிட விவரங்களை இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பும்போது தற்போதைய நிலவரப்படி நாளது தேதியில் அப்பள்ளிக்கு பூர்த்தி செய்ய ஏதுவாக நிரப்பத் தகுந்த என்பதையும், இப்பணியிடம் அப்பள்ளியில் IFHRMSல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்த பின்னரே உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

DSE - BT Vacancy as on 31-05-2026.pdf

👇👇👇👇

Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி