ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு முன்னுரிமை பட்டியல் நாளை வெளியீடு.
அரசுப்பள்ளி ஆசிரியர் களுக்கு பணிநிரவல், பொது மாறுதல் கலந்தாய்வு, ஜூலை 1 முதல் 30ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்பும் ஆசி ரியர்களிடமிருந்து விண் ணப்பம், 'எமிஸ்' இணைய தளம் வழியாக், கடந்த 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை பெறப்பட்டன. தொடர்ந்து, விண்ணப் பங்களின் முன்னுரிமை பட்டியல் தயார்செய்யும் பணி, காலிப்பணியிட விவரங்கள் இறுதி செய்யும் பணி நடக்கிறது. இதைய டுத்து, பணியிட மாறுதல் விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமை பட்டியல் மற் றும் காலிப்பணியிடங்கள் விவரம்,மாவட்ட வாரியாக நாளை வெளியாக உள்ளது. இதன் அடிப்படையில், ஜூலை 1 முதல் பணி நிரவல், பொதுமாறுதல் கலந்தாய்வு நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள், மாவட்டம் வாரியாக முழு வீச்சில் நடந்து வருகிறது.

மிகவும் காலதாமதமாக காலி பணியிடம் வெளியிட மறுப்பது சில மாவட்டங்களில் சந்தேகம் தறுகின்றன
ReplyDelete