ஆசிரியர் காலியிடங்களை தெரிவிக்க உத்தரவு
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, ஆசிரியர் பணியிட விபரங்களை, வரும் 23ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்' என, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.அதில் கூறியிருப்பதாவது:
பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வை நடத்த, மாவட்ட வாரியாக காலியாக உள்ள தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட, அனைத்து வகை ஆசிரியர் காலியிடங்களை, வரும் 23ம் தேதிக்குள், 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
முன்னறிவிப்பின்றி ஒரு மாதத்துக்கு மேல் பள்ளிக்கு வராத ஆசிரியர்களின் பணியிடங்களையும், காலிப்பணியிடமாகக் கருத வேண்டும்.தற்காலிக பணிநீக்கம், மகப்பேறு விடுப்பு, வேறு பள்ளி அல்லது அலுவலகத்தில் மாற்றுப்பணிக்கு சென்றவர்கள், மருத்துவ விடுப்பில் உள்ளவர்களின் பணியிடங்களை, காலியிடமாக கருதக்கூடாது. பட்டியலை பதிவேற்றிய பின், திருத்த இயலாது. பட்டியலில் ஏற்படும் தவறுகளுக்கு, முதன்மை மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களே பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி