மக்கள் தொகை கணக்கெடுப்பு - காலை அல்லது மாலை மேற்கொள்ள அனுமதி அளிக்க கோரி சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்க உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2026

மக்கள் தொகை கணக்கெடுப்பு - காலை அல்லது மாலை மேற்கொள்ள அனுமதி அளிக்க கோரி சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்க உத்தரவு.

தென்காசி மாவட்டம். 2027ம் ஆண்டிற்கான தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. முதற்கட்ட பணிகளின் ஒரு பகுதியாக சுய கணக்கெடுப்பு பணிகள் கடந்த 17.072026 முதல் 3107.2026 நடைபெற்று வருகிறது. மேலும் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள். விற்பனைக்கூடங்கள் ஆகியவற்றின் கணக்கெடுப்பு பணியினை மேற்கொள்வதற்கு மாவட்டத்தின் 31 பொறுப்பு அலுவலகங்களில் எல்லைக்குட்பட்ட பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களை இப்பணிக்காக Supervisor களாகவும், Enumerators களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


அவ்வாறு நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் வரும் 0108.2026 முதல் 30.08.2026 வரை இப்பணியில் ஈடுபட வேண்டியுள்ளதால் அன்னார்கள் இப்பணியினை காலை வேலையிலோ அல்லது மாலை வேலையிலோ மேற்கொள்ள அனுமதி அளிக்க கோரி சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்கி இப்பணியினை எவ்வித தொய்வுமின்றி குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவு செய்திட ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி