School Morning Prayer Activities - 23.07.2026 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 22, 2026

School Morning Prayer Activities - 23.07.2026

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.07.2026

திருக்குறள்

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:46 சிற்றினம் சேராமை

குறள் எண்:456

குறள்:

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை. 

பொருள்:

மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு , அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும், இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை.

பழமொழி :

Good and Bad are not due to others.

நன்றும் தீதும் பிறர் தர வாரா.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. பொது அறிவு மற்றும் நற்பண்புகளால் என்னை நான் உயர்த்திக் கொள்வேன். 

2. என் பெற்றோரையும் ஆசிரியர்களையும் துன்புறுத்தும் எந்த ஒரு செயலையும் நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்.

பொன்மொழி : 

போராட்டம் இல்லாத வெற்றி, மதிப்பில்லாத வெற்றியாகும்.

Thought for the Day :

A victory achieved without struggle is a victory without value.

பொது அறிவு : 

1.தென்னகத்தின் கங்கை என்றழைக்கப்படும் தீபகற்ப ஆறு எது? 

காவிரி. 

2. காவிரி ஆறு தனது பயனத்தை முடித்து எந்த இடத்தில் வங்கக் கடலில் கலக்கிறது?

 பூம்புகார்.

English words :

Ignore - Pay no attention to, புறக்கணி.

Loyal - Faithful and supportive, விசுவாசமான

புவியியலும் சுற்றுசூழலும் :

குடிமையியலில் நாம் நமது நாட்டின் ஆட்சிப் பணி அல்லது நிர்வாகப் பணி குறித்து காண்போம். அடித் தளமான கிராமங்கள் அதன் நிர்வாகம் எவ்வாறு செயல் படுகிறது என்று பார்ப்போம்.இந்தியாவின் அடிப்படை நிர்வாக அலகு கிராமம் ஆகும். கிராம மக்களின் தேவைகளை கவனித்து, வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் அமைப்பு கிராம பஞ்சாயத்து எனப்படுகிறது.

NMMS :

MAT 

கொடுக்கப்பட்டுள்ள படங்களில் வேறுபட்டதைத் தேர்ந்தெடு 



விடை: (4)

ஜூலை 23

பால கங்காதர திலகர் அவர்களின் பிறந்தநாள்

பால கங்காதர திலகர் (Bal Gangadhar Tilak, மராத்தி: बाळ गंगाधर टिळक, பால கங்காதர திலகர்) 23 சூலை 1856 –1 ஆகத்து 1920 (அகவை 64), ஒரு இந்தியத் "தேசியவாதியும்", "சமூக சீர்திருத்தவாதியும்", விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும் இவரே. இவரது பெயருடன் கௌரவப் பட்டமான "லோகமான்ய" என்பதையும் சேர்த்து அழைப்பதுண்டு. இந்தியாவுக்கு முதன் முதலில் தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். தன்னாட்சி எனது பிறப்புரிமை அதனை நான் பெறுவேன் என்னும் இவரது புகழ் பெற்ற கூற்று இன்றும் இந்தியாவில் நினைவுகூரப்படுகிறது. முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் ஆவார். மக்களிடையே அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. 

நீதிக்கதை

 ஒரு சிறிய அலட்சியம்

ஒரு ஞாயிற்றுக்கிழமை, நண்பர்களான விஷ்ணு மற்றும் தர்ஷன் கிராமத்திற்கு அருகிலிருந்த குளத்திற்குச் சென்றனர். பெரியவர்கள் யாரும் இல்லாததால், குளத்தின் கரையில் விளையாட ஆரம்பித்தனர்.

தர்ஷன், "கொஞ்சம் தண்ணீருக்குள் இறங்கி விளையாடலாமே!" என்று கூறினான். ஆனால் விஷ்ணு, "நமக்கு நீச்சல் சரியாகத் தெரியாது. பெரியவர்கள் இல்லாமல் தண்ணீருக்குள் போகக்கூடாது," என்று எச்சரித்தான்.

அதைப் பொருட்படுத்தாமல் தர்ஷன் தண்ணீருக்குள் இறங்க முயன்றபோது, கால் வழுக்கி ஆழமான பகுதிக்குச் சென்றான். உடனே விஷ்ணு அருகில் இருந்த பெரியவர்களை உதவிக்கு அழைத்தான். அவர்கள் விரைந்து வந்து தர்ஷனை பாதுகாப்பாக மீட்டனர்.

அந்தச் சம்பவத்திற்குப் பிறகு தர்ஷன், "நண்பனின் அறிவுரையைக் கேட்டிருந்தால் இந்த ஆபத்து ஏற்பட்டிருக்காது," என்று உணர்ந்தான்.

நீதி:

ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் பெரியவர்கள் இல்லாமல் விளையாடவோ, தண்ணீருக்குள் இறங்கவோ கூடாது. சிறிய அலட்சியமும் பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம்.

இன்றைய செய்திகள்

23.07.2026

🗒️இளைஞர்கள் தங்களின் தொழில் திறன்களை தேசிய மற்றும் சர்வதேச அளவில் கொண்டுச் செல்லும் சிறந்த வாய்ப்பாக 2027  ஆண்டுக்கான  இந்தியத் திறன் போட்டிகளுக்கான பதிவு தொடங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

🗒️டெல்லியில் பயணிகளின் துரித சேவைக்காக அனைத்து ரெயில் நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளதாக டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

🗒️சுற்றுப்பயணத்தின் போது வடக்கு மாசிடோனியாவில் அன்னை தெரசா நினைவிடத்தை பார்வையிட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு ஸ்கோப்ஜே அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி உருவச் சிலையையும்  திறந்து வைத்தார்.

 விளையாட்டுச் செய்திகள் 

🏀சீனா ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் பி.வி.சிந்து மற்றும்  உன்னதி ஹூடா இருவரும்  நேர்கணக்கில் மோதிய போட்டியில்  பி.வி.சிந்து வெற்றி பெற்றார்.

🏀உலக கோப்பை கால்பந்து போட்டி  தரவரிசையில் 
ஸ்பெயின் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

Today's Headlines

🗒️ The Tamil Nadu Government has announced that registration for the India Skills Competition 2027 will begin soon. It is a good opportunity for young people to show their skills at the national and international levels.

🗒️ The Delhi Metro Rail Corporation has said that all railway stations in Delhi are now open to provide faster and better service for passengers.

🗒️ During her foreign visit, President Droupadi Murmu visited the Mother Teresa Memorial in North Macedonia. She also unveiled the Mahatma Gandhi statue at the Skopje Museum.

Sports News
🏀 In the China Open Badminton tournament, India's P. V. Sindhu defeated Unnati Hooda in a straight-game match.

🏀 Spain has regained the No. 1 position in the FIFA World Cup football rankings

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி