தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு 2026-2027ஆம் ஆண்டிற்கு செலுத்த வேண்டிய இணைப்புக் கட்டணம் தொகை செலுத்த கோருதல் - சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 20, 2026

தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு 2026-2027ஆம் ஆண்டிற்கு செலுத்த வேண்டிய இணைப்புக் கட்டணம் தொகை செலுத்த கோருதல் - சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு 2026-2027ஆம் ஆண்டிற்கு செலுத்த வேண்டிய இணைப்புக் கட்டணம் தொகை செலுத்த கோருதல் - சார்ந்து. 15.09.2026க்குள்


மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களைத் தலைவராகவும், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்கள், பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்கள், தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் ஆகியோரைத் துணைத் தலைவர்களாகக் கொண்டு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தினுள் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் இயங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தொடக்க / நடுநிலை /உயர்நிலை / மேல்நிலை / மெட்ரிக்குலேஷன் மற்றும் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து இணைப்புக் கட்டணத் தொகையினை முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலம் பெற்று பெறப்பட்டத் தொகையை ஒரே வங்கி வரைவாக தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது.


எனவே, மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) தங்கள் ஆளுகையின் கீழுள்ள அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலிருந்து கீழ்க்கண்டவாறு 2026-2027ஆம் ஆண்டிற்குரிய இணைப்புக்கட்டணத் தொகையினை சென்னையில் (Payable at Chennai) "The Secretary & Treasurer, Tamilnadu State Parent Teacher Association, Chennai-6" 15.09.2026-க்குள் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி