நிதி நிலை அறிக்கை 2026 2027
TamilNadu Budget 2026-2027 Part - I - Tamil - Date.05.08.2026
👇👇👇
முக்கிய அறிவிப்புகள்
1. பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 44,527 கோடியும், உயர் கல்வித் துறைக்கு ரூ.8,393, இளைஞர் மேம்பாட்டுத் துறைக்கு ரூ. 277 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
2. 11 ஆம் வகுப்பு படிக்கும் 5.32 லட்சம் மாணவர்களுக்கு ரூ. 277 கோடியில் வாட்டர் பாட்டிலுடன் கூடிய நவீன சைக்கிள்கள், ஹெல்மெட்டுடன் வழங்கப்படும்.
3. கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ. 2,000 கோடியில் வெற்றி மடிக்கணினி திட்டத்தின் கீழ் மடிக்கணினிகள் வழங்கப்படும்.
4. பள்ளி நிறைவுத் திட்டத்தின் கீழ் 3,734 அரசுப் பள்ளிகளில் ரூ. 2,132 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த ஆண்டிற்கு ரூ. 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
5. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர வழி கற்றல் என்ற புதிய தொழிற்பிரிவுக்காக ரூ. 5.10 கோடி ஒதுக்கீடு
6. ரூ. 90 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் நிறுவப்படும்.
👉🏻அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் தூய்மை மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டும்.
முதல் கட்டமாக 10,000 பள்ளிகளில் இப்பணிகளை மேற்கொள்ள ரூ.129 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது." -நிதியமைச்சர்

60 ஆயிரம் அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தில் எந்த பலனையும் பெறவில்லையே. அதிமுக, திமுக வை போல இல்லாமல் இப்பொழுதே அவர்களுக்கு பணபலன் கிடைக்க ஆவன செய்ய வேண்டும். இதை தவெக அரசு உடனே செய்யுமா ?
ReplyDelete