சட்டப்பேரவையில் கலை பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
நீர்வளத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சுற்றுலா-கலை மற்றும் பண்பாடு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம், பேரவையில் இன்று(ஆக. 19) நடைபெற்றது.
அப்போது, கலை பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:
கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் விரிவுரையாளர் / பயிற்றுநர் பணியிடங்களை மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு தொகுப்பூதியத்தில் நிரப்பி, மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது.
சிறந்த கலைஞர்கள் ஆசிரியர்களாக ரூ. 20,000 தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கான மாத ஊதியம் ரூ.25,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதற்கென தொடர்ந்து கூடுதல் செலவினமாக ரூ. 45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னை அரசு அருங்காட்சியகம் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு இணையதள அருங்காட்சியகமாக அறிமுகப்படுத்தப்படும்
சென்னை அரசு அருங்காட்சியகம் மற்றும் 23 மாவட்ட அருங்காட்சியகங்கள் ரூ. 20 கோடி செலவில் 2 ஆண்டுகளில் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும்.
அருங்காட்சியகப் பொருள்கள் டிஜிட்டல் வடிவில் பதிவு செய்யப்பட்டு, நுழைவுச் சீட்டுகள் கணினிமயமாக்கப்படும். இதற்கான DPR ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.
அருங்காட்சியக விரிவாக்கத்தின் முதல்கட்டமாக 4 மாவட்டங்களுக்கான திட்ட அறிக்கை ரூ. 80 இலட்சம் மதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.
தற்போது 23 மாவட்டங்களில் செயல்படும் அரசு அருங்காட்சியகங்கள் மீதமுள்ள மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். முதல்கட்டமாக நாமக்கல், திருவள்ளூர், கன்னியாகுமரி மற்றும் அரியலூரில் புதிய அருங்காட்சியகங்கள் அமைக்க ரூ. 80 லட்சம் செலவில் DPR தயாரிக்கப்படும்.

பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களின் நீண்ட ஆண்டு கோரிக்கையான தொழிலார் சட்டப்படி ஒரு நாள் ஊதியமாக 750 வழங்கிட கல்வி அமைச்சர் அய்யா விஜய் அண்ணன் அனுமதி பெற்று உரிய உதவி செய்ய வேண்டும்
ReplyDelete