ஜியோ பிரைம் மெம்பர்ஷிப் திட்டம் அறிமுகம்: ரூ.299 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி உள்பட பல சலுகைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 19, 2026

ஜியோ பிரைம் மெம்பர்ஷிப் திட்டம் அறிமுகம்: ரூ.299 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி உள்பட பல சலுகைகள்

 

ஜியோ நிறு​வனத்​தின் 10-ம் ஆண்டு நிறைவைக் கொண்​டாடும் வகை​யில், வாடிக்​கை​யாளர்​களுக்கு விலை​யேற்​றத்​தில் இருந்து ஓராண்​டுக்கு பாது​காப்பு அளிக்​கும் ஜியோ பிரைம் மெம்​பர்​ஷிப் திட்​டம் அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது.

ரூ.299 திட்​டத்​தில் நாள்​தோறும் 1.5 ஜிபி டேட்டா உள்பட அனைத்து சலுகைகளும் எந்த மாற்​ற​மும் இன்றி தொடரும் என ஜியோ உறுதி அளித்​துள்​ளது. அடுத்த ஓராண்​டுக்கு (2027-ம் ஆண்டு செப்.5 வரை) ஜியோ ரீசார்ஜ் கட்​ட​ணங்​கள் உயர்ந்​தா​லும், பிரைம் வாடிக்​கை​யாளர்​கள் தற்​போதைய ரூ.299 கட்​ட​ ணத்தை தொடர்ந்து ரீசார்ஜ் செய்து பயன்​படுத்​தலாம்.

ரூ.299 திட்​டத்​தில் நாள்​தோறும் 1.5 ஜிபி டேட்​டா, 28 நாட்​கள் செல்​லுபடி​யாகும் காலம், ஜியோ ஹாட்​ஸ்​டார், 5 ஆயிரம் ஜிபி ஸ்டோரேஜ், ப்ரோ கூகுல்​ஜெமினி ஆகியவை இடம்​பெற்​றுள்​ளன. புதிய மற்​றும் பழைய வாடிக்​கை​யாளர்​கள் ரூ.300 செலுத்தி இந்த மெம்​பர்​ஷிப்​பில் இணை​ய​லாம்.

புதிய ஜியோஹோம் அல்​லது ஜியோபிசி இணைப்​புக்கு ரூ.300 வவுச்​சர். நண்​பர்​கள்​/ குடும்​பத்​தினருக்கு புதிய ஜியோசிம் இணைப்​புக்கு ரூ.300 வவுச்​சர். சிறப்பு மெம்​பர்​ஷிப்​பில் இணை​யும் வாடிக்​கை​யாளர்​களுக்கு ரூ.600 மதிப்​புள்ள கேஷ்பேக் வவுச்​சர்​கள், புதிய சேவை​களை முன்​கூட்​டியே பயன்​படுத்​தும் ஏர்லி அக்​சஸ் (Early Access) வசதி, முன்​னுரிமை வாடிக்​கை​யாளர் சேவை (Priority Support) ஆகிய சலுகைகளும் வழங்​கப்​படு​கின்​றன.

இணை​யும் வழி​முறை

MyJio செயலி, Jio.com இணை​யதளம், ஜியோ ஸ்டோர்​கள் மற்​றும் அதன் தொடர்​புடைய கடைகள் மூலம் இத்​திட்​டத்​தில் இணை​ய​லாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி