அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை அவகாசம் ஆக.31-ம் தேதி வரை நீட்டிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 18, 2026

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை அவகாசம் ஆக.31-ம் தேதி வரை நீட்டிப்பு

 

தமிழக வேலை​வாய்ப்பு மற்​றும் பயிற்​சித் துறையின் செய்​திக்​குறிப்​பில் கூறியிருப்பதாவது: தமிழகத்​தில் வேலை​வாய்ப்பு மற்​றும் பயிற்​சித் துறை​யின்​ கீழ் 132 அரசு தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களும் (ஐடிஐ), 277 தனி​யார் தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களும் இயங்கி வரு​கின்​றன. இவற்றில் 2026-27-ம் ஆண்டு கலந்​தாய்​வுக்​கான கால அவகாசம் ஆக.14-ம் தேதி​யுடன் நிறைவடைந்​தது.

இந்​நிலை​யில். மாணவர்​களின் நலன் கருதி தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களில் நேரடி சேர்க்​கைக்​கான கால அவகாசம் ஆக31-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது.

தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களில் சேரும் மாணவர்​களுக்கு பயிற்​சிக் கட்​ட​ணம் இல்​லை. கல்வி உதவித்​தொகை​யாக மாதம் ரூ.750 வழங்​கப்​படும். அரசுப் பள்​ளி​களில் பயின்​றவர்​களுக்கு தமிழ்ப் புதல்​வன் மற்​றும் புது​மைப்​பெண் திட்​டங்​களின்​கீழ் ரூ.1000 கூடு​தலாக வழங்​கப்​படும். அரசு வழங்​கும் இலவச மிதிவண்​டி, சீருடை, ஷூ, பயிற்​சிக் கருவி​கள் உள்​ளிட்ட அனைத்​தும் வழங்​கப்​படும். குறிப்​பிட்ட அரசு தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களில் விடுதி வசதி​யும் உள்​ளது. மேலும், விவரங்​களுக்கு 9499055642, வாட்​ஸ்​-அப் எண்- 9499055612 ஆகிய​வற்றை தொடர்​பு​கொள்​ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி