ரூ.5,109 கோடி கல்வி நிதியை மத்திய அரசு வழங்கவில்லை: பள்ளிக்கல்வித் துறை தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2026

ரூ.5,109 கோடி கல்வி நிதியை மத்திய அரசு வழங்கவில்லை: பள்ளிக்கல்வித் துறை தகவல்

தமிழக பள்​ளிக்​கல்​வித் துறை​யில் கீழ் இயங்​கும் அரசு மற்​றும் அரசு உதவி பெறும் பள்​ளி​களில் பணி​கள் சார்ந்த பல்​வேறு திட்​டங்​களுக்கு மத்​திய கல்வி அமைச்​சகம் நிதி​யுதவி வழங்​கு​கிறது.

மத்​திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் என்ற விகிதத்​தில் இந்த நிதி பங்​கீடு அமை​யும். இதற்​கிடையே, மும்​மொழி கொள்​கை​யில் விலக்கு உட்பட சில கோரிக்​கைகளை மத்​திய அரசு ஏற்​காத​தால் தேசிய கல்விக் கொள்​கை​யின் அம்​ச​மான பிஎம்  பள்ளி திட்​டத்​தில் சேரு​வதற்கு தமிழகம் மறுத்​து​விட்​டது.

இதையடுத்து தமிழகத்​துக்​கான ஒருங்​கிணைந்த பள்​ளிக்​கல்​வி​திட்ட நிதியை 2024–25-ம் கல்​வி​யாண்டு முதல் மத்​திய அரசு நிறுத்​தி​விட்​டது.

ஒட்​டுமொத்​த​மாக கடந்த 3 ஆண்​டு​களில் மட்​டும் ரூ.5,109 கோடி நிதி​யானது தமிழகத்​துக்கு வழங்​கப்​ப​டா​மல் மத்​திய அரசு நிலுவை வைத்​துள்​ள​தாக பள்​ளிக்​கல்​வித் துறை கொள்கை விளக்​கக் குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து கல்​வித்​துறை அலு​வலர்​கள் கூறும்​போது, “மத்​திய அரசு 3 ஆண்​டு​களாக நமக்கு தரவேண்​டிய நிதியை வழங்​க​வில்​லை. இது​சார்ந்து உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடர்ந்​த​போது, நீதிப​தி​கள் உத்​தர​வின்​படி 2024–25 மற்​றும் 2025–26-ம் ஆண்​டு​களுக்​கான ஆர்​டிஇ திட்ட நிதி ரூ.714 கோடியை மட்​டும் மத்​திய அரசு வழங்​கியது.

எனினும், பிற திட்​டங்​களுக்​கான நிதி இது​வரை விடுவிக்​கப்​பட​வில்​லை. இதனால் மாநில அரசின் பங்​களிப்பு நிதியை கொண்டு தற்​போது திட்​டப்​பணி​கள் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன.

அந்​தவகை​யில் 2024–25, 2025–26-ம் கல்​வி​யாண்​டு​களில் மாநில அரசு ரூ.2,014 கோடி செல​விட்​டுள்​ளது. நடப்பு 2026–27-ம் கல்​வி​யாண்​டில் இடைக்​கால நிதி​யாக, ரூ.647 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

அதே​நேரம் நீண்ட காலத்​துக்கு மாநில அரசே இந்​நிலையை சமாளிக்க முடி​யாது. ஆசிரியர் பயிற்​சிகள், மாணவர்​களுக்​கான கற்​றல் திட்​டங்​கள் உள்​ளிட்ட கல்வி சார்ந்த செயல்​பாடு​கள் பா​திக்​கப்பட வாய்ப்​புள்​ளது”என்​றனர்​.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி