ஏகலைவா பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 3, 2026

ஏகலைவா பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்பு!

 

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அபிநவம் மற்றும் ஏற்காடு ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிகமாக நிரப்பிட, தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகி இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தது: ன்றன.

மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அபிநவம் மற்றும் ஏற்காடு ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிகமாக நிரப்பிட, தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தது:

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அபிநவம் மற்றும் ஏற்காடு அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் 2026-2027 ஆம் ஆண்டில் காலியாக உள்ள பட்டதாரி/முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் அல்லாத காலிப் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்பிடும் பொருட்டு, பணி நாடுநா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எஸ்சி மற்றும் எஸ்டி இனத்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதன்படி, ஸ்போக்கன் இங்கிலிஷ் (முதுநிலை பட்டப்படிப்பு ) பணிக்கு தொகுப்பூதியம் ரூ. 18 ஆயிரத்தில் அபிநவம் மற்றும் ஏற்காடு பள்ளிகளுக்கு தலா 1 என 2 காலிப் பணியிடங்களும், ஸ்போக்கன் இங்கிலிஷ் (இளநிலை படிப்பு) பணிக்கு தொகுப்பூதியம் ரூ. 15 ஆயிரத்தில் அபிநவம் மற்றும் ஏற்காடு பள்ளிகளுக்கு தலா 1 என 2 காலிப் பணியிடங்களும், இசை பயிற்றுநா் பணிக்கு தொகுப்பூதியம் ரூ. 15 ஆயிரத்தில் அபிநவம் மற்றும் ஏற்காடு பள்ளிகளுக்கு தலா 1 என 2 காலிப் பணியிடங்களும், கலை பயிற்சியாளா் பணிக்கு தொகுப்பூதியம் ரூ. 15 ஆயிரத்தில் ஏற்காடு பள்ளிக்கு 1 காலிப் பணியிடமும், கவுன்சிலா் பணிக்கு தொகுப்பூதியம் ரூ. 15 ஆயிரத்தில் அபிநவம் மற்றும் ஏற்காடு பள்ளிகளுக்கு தலா 1 என 2 காலிப் பணியிடங்களும், செவிலியா் பணிக்கு தொகுப்பூதியம் ரூ. 15 ஆயிரத்தில் அபிநவம் மற்றும் ஏற்காடு பள்ளிகளுக்கு தலா 1 என 2 காலிப் பணியிடங்களும், இளநிலை உதவியாளா் பணிக்கு தொகுப்பூதியம் ரூ. 13 ஆயிரத்தில் அபிநவம் பள்ளிக்கு 2 மற்றும் ஏற்காடு பள்ளிக்கு 1 என 3 காலிப் பணியிடங்களும், ஓட்டுநா் பணிக்கு தொகுப்பூதியம் ரூ. 15 ஆயிரத்தில் அபிநவம் பள்ளிக்கு 1 காலிப் பணியிடமும், அலுவலா் உதவியாளா் பணிக்கு தொகுப்பூதியம் ரூ. 10,400-இல் ஏற்காடு பள்ளிக்கு 1 காலிப் பணியிடமும், துப்புரவு பணியாளா் பணிக்கு தொகுப்பூதியம் ரூ. 7 ஆயிரத்தில் ஏற்காடு பள்ளிக்கு 1 காலிப் பணியிடமும் உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி