தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கு ஹால் ​டிக்கெட் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 7, 2026

தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கு ஹால் ​டிக்கெட்

 டிஎன்​பிஎஸ்சி தேர்வு கட்​டுப்​பாட்டு அலு​வலர் ப.ஸ்ரீ வெங்கட பிரியா வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: ஒருங்​கிணைந்த தொழில்​நுட்ப பணி​களில் நேர்​முகத்​தேர்வு அல்​லாத பதவி​களுக்​கான கணினிவழி தேர்வு மற்​றும் விரி​வாக எழுதும் தேர்வு ஆகஸ்ட் 16 முதல் 21 வரை, தொடர்ந்து செப்​டம்​பர் 7 முதல் 12 வரை மற்​றும் 19-ம்தேதி நடை​பெற உள்​ளது.

இத்​தேர்​வெழுத அனு​ம​திக்​கப்​பட்ட விண்​ணப்​ப​தா​ரர்​களுக்​கான ஹால்​டிக்​கெட் தேர்​வாணை​யத்​தின் இணை​யதளத்​தில் பதிவேற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. விண்​ணப்​ப​தா​ரர்​கள் தங்​களின் ஒரு​முறை பதிவுதளத்​தின் மூல​மாக விண்​ணப்ப எண், பிறந்த தேதியை குறிப்​பிட்டு ஹால்​டிக்​கெட்டை பதி​விறக்கம் செய்​து​கொள்​ளலாம். இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.

இத்​தேர்​வு, உதவி பொறி​யாளர், வேளாண் விரி​வாக்க அலு​வலர், மருந்து ஆய்​வாளர், தோட்​டக்​கலை அலு​வலர், தொல்​லியல் அலு​வலர் ஜூனியர் போட்​டோகி​ராபர் உள்பட 45 வித​மான பதவி​களில் 508 காலிப்​பணி​யிடங்​களை நிரப்​புவதற்காக நடத்​தப்​படு​கிறது.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி