ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று மக்களவையில் மோடி அரசு அறிவித்துள்ளது. ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சல் மாநில அரசுகள், தேசிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறுவது குறித்து ஒன்றிய அரசுக்கும், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளதாக மக்களவையில் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் குறிப்பிட்டார்.
2025ல் பிரதமர் பெற்ற பரிசுகள் ஏலம் மூலம் ரூ. 1.89 கோடி வருவாய்
பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள் மற்றும் அன்பளிப்புகளின் 2025ஆம் ஆண்டுக்கான மின்னணு ஏலத்தின் மூலம் ஒன்றிய அரசு ரூ. 1.89 கோடியைப் பெற்றுள்ளது என்று சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். அதேவேளையில் 2024ல் நடந்த ஏலத்தில் இத்தொகை ரூ. 2.24 கோடியாக இருந்தது. அப்போது 600-க்கும் மேற்பட்ட நினைவுப் பரிசுகள் மற்றும் அன்பளிப்புகள் மின்னணு ஏலத்தில் வைக்கப்பட்டன என்று தெரிவித்தார்.
உலக தரவரிசையில் 52 இந்திய கல்வி நிறுவனங்கள்
தேசிய நிறுவனத் தரவரிசைச் சட்டகம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையில் இடம்பெறும் இந்திய கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை, 2015ஆம் ஆண்டுப் பட்டியலில் இருந்த 11லிருந்து 2027ஆம் ஆண்டுப் பட்டியலில் 52ஆக அதிகரித்துள்ளது என்று மக்களவையில் கல்வித் துறை இணையமைச்சர் சுகந்த மஜும்தார் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வேலையின்மை விகிதம் மாற்றம் இல்லை
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில், இந்தியாவில் வேலையின்மை விகிதம் மற்றும் தொழிலாளர் மக்கள் தொகை விகிதம் ஆகியவை ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் ஏறக்குறைய மாறாமல் இருந்தன. இது நாட்டின் வேலைவாய்ப்புச் சந்தையில் எந்தவிதமான விரிவாக்கமோ அல்லது சுருக்கமோ ஏற்படவில்லை என்பதைக் காட்டுகிறது. வேலைவாய்ப்பு பெறும் வயதில் இருந்து வேலையில்லாமல் இருப்பவர்களை அளவிடும் வேலையின்மை விகிதம், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 5.6 சதவீதமாக இருந்த நிலையில், இக்காலாண்டில் 5.5 சதவீதமாக இருந்தது என்று புள்ளிவிவர அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல்-ஜூன் 2026 காலகட்டத்தில், நாட்டில் சராசரியாக 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 56.6 கோடி பேர் பணியில் இருந்தனர். இவர்களில் 40.2 கோடி பேர் ஆண்களும், 16.4 கோடி பேர் பெண்களும் ஆவர். அகில இந்திய அளவில், இந்த காலாண்டு மதிப்பீடுகள் மொத்தம் 5,59,673 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி