புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்ட பின்னரே பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலர் ஏ.சத்தியபாமா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக் கையில் கூறியிருப்பதாவது: பெற்றோர் ஆசிரியர் கழக விதிமுறைகளின்படி பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பொதுக்குழுக் கூட்டம் நடத்தி புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளுக்குமான வழிகாட்டுதல்கள் புதுப்பிக்கப்பட உள்ளன.
எனவே, மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் திருத்திய வழிகாட்டுதல்களுக்கான சுற்றறிக்கை அனுப்பப்பட்ட பிறகு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக அமைப்புக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் நடைமுறை மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி