சத்துணவு உண்ண விருப்பமுள்ள மாணவர்கள் பெயர் Emis Portal லில் பதிவுசெய்ய இறுதி நாள் 06.08.2026 - Dir Proceedings - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 4, 2026

சத்துணவு உண்ண விருப்பமுள்ள மாணவர்கள் பெயர் Emis Portal லில் பதிவுசெய்ய இறுதி நாள் 06.08.2026 - Dir Proceedings

 

சத்துணவு உண்ண விருப்பமுள்ள மாணவர்கள் பெயர் Emis Portal லில் பதிவுசெய்ய இறுதி நாள் 06.08.2026 பிற் பகல் 1.00 மணிக்குள்ளாக... தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறை...

2026-27 ஆம் கல்வியாண்டிற்கு புதிய மாணவர்களின் சேர்க்கை நடைபெறும் என்பதால், மாணவர்களுக்கு அளவெடுத்து நான்கு இணை சீருடைகள் தைத்து உரிய காலத்திற்குள் வழங்கப்பட வேண்டும். எனவே சங்க உறுப்பினர்கள் பள்ளிகளுக்கு சென்று புதியதாக சேர்ந்த மாணக்கர்களை அளவெடுப்பதற்கு ஏதுவாக வட்டார வாரியாக (BEO,DEO wise) மற்றும் பள்ளி மற்றும் வகுப்பு வாரியாக மாணாக்கர்களின் விவரம் EMIS portal-ல் பதிவேற்றம் செய்து வழங்கிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், 2026-27 ஆம் கல்வியாண்டில் 1 ஆம் வகுப்பு மற்றும் 2 முதல் 8 ஆம் வகுப்பு ஆகியவற்றில் புதியதாக சேர்க்கப்பட்ட மாணவ/மாணவிகள் விவரங்கள் தனித்தனியாக Hilly/Non-Hilly வாரியாக பிரித்து வழங்கிடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, 2026-27 ஆம் கல்வியாண்டிற்கு 1 ஆம் வகுப்பு மற்றும் 2 முதல் 8 ஆம் வகுப்பு வரை புதியதாக சேர்ந்த மாணவ/மாணவிகள் சேர்க்கையின் அடிப்படையில் சீருடைகள் அளவுகள் எடுப்பதற்கு ஏதுவாக மாணவ/மாணவிகள் விவரங்கள் சமூக நல இயக்ககத்திற்கு அனுப்பும்பொருட்டு, பள்ளிகளில் புதியதாக சேர்ந்த சத்துணவு உண்ண விருப்பமுள்ள மாணவ/மாணவிகள் விவரங்களை EMIS portal-ல் 06.08.2026 அன்று பிற்பகல் 1.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் தெரிவிக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறது.

2 comments:

  1. சத்துணவு மாணவர்களுக்கு வேண்டுமா ?வேண்டாமா? என்பதை பெரும்பாலான பள்ளிகளில்ஆசிரியர்கள் தான் முடிவு செய்கின்றனர் , பெற்றோர்களின் சம்மதம் இல்லை , பெற்றோர்களின் கையெழுத்து வாங்கி வர form கொடுத்தாலும் அதை ஆசிரியர்கள் பெற்றோர்களின் கையெழுத்தை அல்லது பெயரை எழுதுகின்றனர் , புதிய சரியான சம்மதம் நடைமுறை வாங்க நடவடிக்கை தேவை .மாணவர்கள் மிக குறைந்த எண்ணிக்கையில் காலை மற்றும் மதிய உணவு சாப்பிடுகின்றனர் குறிப்பாக மிகவும் வறுமை அல்லது குடும்ப சூழல் காரணமாக , மாணவர்கள் மட்டுமே காலை உணவு மற்றும் மத்திய உணவு சாப்பிடுகின்றனர் மீதம் உள்ள பலர் வீட்டு சாப்பாடு மட்டுமே சாப்பிடுகின்றனர். ஆகவே சரியான கணக்கெடுப்பின் மூலம் , உண்மையாக சத்துணவு தேவைப்படும் மாணவர்களுக்கு அந்த நிதி கூடுதலாக செலவிட சரியான கணக்கெடுப்பு உண்மை தன்மை தேவை , சீராக சம்பா அரிசி , கூட்டு பொரியலுடன் தரமான காய்கறிகள் அதிகமா சேர்த்து குழம்பு தயாரிக்கிலாம் ஏழை மாணவர்களுக்கு சத்துணவு உண்மையில் தேவைப்படும் மாணவர்களுக்கு . மேலும் சிறுதானியம் காலை உணவுடன் சேர்த்து வழங்கலாம்

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் சீராக சம்பா இல்லை , பொன்னி அரிசி சாப்பாடு , தரமான அளவில் முட்டை , புதிதாக உள்ள முட்டை

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி