School Morning Prayer Activities - 05.08.2026 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 4, 2026

School Morning Prayer Activities - 05.08.2026

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.08.2026

திருக்குறள்

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:47 தெரிந்து செயல் வகை

குறள் எண்:465

குறள்:

 வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.

பொருள்:

முறையாகத் திட்டமிடாது ஒரு செயலைத் தொடங்குவது, வளரும் நிலத்திலே எதிர் அணியினரை நிலைபெறச் செய்யும் வழியாகும்.

பழமொழி :

Laugh away your fears.

இடுக் கண் வருங்கால் நகுக.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. நான் எனது வாழ்நாளில் யாருக்கும் எவ்விதத்திலும் தீங்கிழைக்க மாட்டேன்.

 2.என்னால் இயன்ற நன்மையை மற்றவர்களுக்குச் செய்வேன்.

பொன்மொழி : 

மழை இயற்கையின் வரம்; அதை பாதுகாப்பது மனிதனின் கடமை.

Thought for the Day :

When rain falls, hope rises.

பொது அறிவு : 

1. தமிழ்நாடு அரசின் மாநில குறிக்கோள் எது? 

"வாய்மையே வெல்லும்." 

2. "சத்யமேவ ஜெயதே " என்பதை தமிழில் "வாய்மையே வெல்லும்" என மாற்றியவர் யார்? 

அறிஞர் அண்ணா.

English words :

Articulate – Speaks clearly, தெளிவாக பேசுபவர்.

Meticulous – Very careful, மிகுந்த கவனமானவர்.

புவியியலும் சுற்றுசூழலும் :

இந்தியாவின் காலநிலை

பெரும்பாலும் பருவமழைக் காலநிலை காணப்படுகிறது.

தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் நாட்டிற்கு மழை வழங்குகின்றன.

NMMS :

SAT 

_________________ என்னும் பாசி, விண்வெளிப் பயணத்தின்போது கார்பன்-டை-ஆக்ஸைடை அகற்றுவதற்கும் மனிதக் கழிவுகளை மட்கச் செய்வதற்கும் பயன்படுகிறது. 

(1) குளோரெல்லா ஃபைரினாய்டோசா 

(2) அனபீனா 

(3) லேமினேரியா

 (4) ஜெலீடியம் 

விடை: (1) குளோரெல்லா ஃபைரினாய்டோசா

ஆகஸ்ட் 05

நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங்  அவர்களின் பிறந்தநாள்


நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong, நீல் ஆம்ஸ்ட்ரோங், ஆகத்து 5, 1930 – ஆகத்து 25, 2012) ஓர் அமெரிக்க விண்வெளி வீரரும் சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதரும் ஆவார். அத்தோடு இவர் வான்வெளிப் பொறியியலாளர், கப்பல்படை விமானி, வெள்ளோட்ட விமானி, மற்றும் பல்கலைக்கழகப் பேராசியர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங், விண்வெளி வீரராக வருவதற்கு முன்னர் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையில் அதிகாரியாக இருந்து கொரியப் போரில் பணியாற்றினார். போருக்குப் பின்னர் பெர்டூ பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டு தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழுவின் அதிவேக விமானம் நிலையத்தில் வெள்ளோட்ட விமானியாகப் பணி புரிந்தார். தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழுவே தற்பொழுது டிரைடன் விமான ஆராய்ச்சி மையம் என்று அழைக்கப்படுகின்றது. 

நீதிக்கதை

 "மேகத்திற்குப் பின்னால் சூரியன்"

ஒரு கிராமத்தில் அகில் என்ற 12ஆம் வகுப்பு மாணவன் வாழ்ந்து வந்தான். படிப்பில் நல்ல திறமை இருந்தாலும், பொதுத் தேர்வு நெருங்கியபோது அவனுக்கு அதிக மனஅழுத்தம் ஏற்பட்டது. "என்னால் நல்ல மதிப்பெண் எடுக்க முடியுமா?", "நான் தோல்வி அடைந்தால் என்ன செய்வேன்?" என்ற எண்ணங்கள் அவனை தினமும் வாட்டின.

முன்பு நண்பர்களுடன் சிரித்துப் பேசும் அகில், இப்போது தனியாகவே இருக்கத் தொடங்கினான். பாடப்புத்தகத்தைத் திறந்தாலே பயம் வந்தது. "என் வாழ்க்கை முடிந்துவிட்டது" என்று அவன் நினைக்க ஆரம்பித்தான்.

ஒருநாள் அவனுடைய ஆசிரியர் இதைக் கவனித்தார். அகிலை அழைத்து, ஒரு சிறிய செடியைக் காட்டி, "இந்தச் செடி இரண்டு நாட்கள் தண்ணீர் இல்லாமல் வாடிவிட்டது. அதனால் இது இனி வளராது என்று சொல்வாயா?" என்று கேட்டார்.

அகில், "இல்லை ஐயா. மீண்டும் தண்ணீர் ஊற்றி பராமரித்தால் அது நன்றாக வளரும்," என்றான்.

அதற்கு ஆசிரியர் சிரித்தபடி, "அதேபோல மனமும் தான். சில நாட்கள் மனஅழுத்தம் வந்ததால் வாழ்க்கை முடிந்துவிடாது. உதவி கேள், ஓய்வு எடு, நம்பிக்கையை விடாதே. மேகங்கள் சூரியனை மறைக்கலாம்; ஆனால் சூரியனை அழிக்க முடியாது," என்றார்.

அந்த வார்த்தைகள் அகிலுக்கு புதிய தைரியம் அளித்தன. அவன் நண்பர்களுடன் பேசத் தொடங்கினான், ஆசிரியர்களிடம் சந்தேகங்களைக் கேட்டான், தினமும் சிறிது நேரம் ஓய்வும் எடுத்தான். மெதுவாக அவன் மனஅழுத்தம் குறைந்தது. தேர்விலும் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றான்.

நீதி:உயர்நிலை வகுப்புகளில் மனஅழுத்தம் வருவது இயல்பானது. ஆனால் அதை மனதிற்குள் வைத்துக்கொண்டு தனியாக போராடாமல், பெற்றோர், ஆசிரியர் அல்லது நம்பிக்கையானவர்களிடம் பகிர்ந்து உதவி கேட்டால், எந்தச் சிரமத்தையும் கடக்க முடியும். இருண்ட இரவுக்குப் பிறகு விடியல் வருவது போல, கஷ்டத்திற்குப் பிறகு நிச்சயம் நல்ல காலம் வரும்.

இன்றைய செய்திகள்

05.08.2026

🗒️முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்திட்ட மாநில மன்றக்கூட்டம் நடைபெற்றது.

🗒️இந்திய ரெயில்வே ஜூலை மாதத்தில் 14 கோடி டன் சரக்குகளை கையாண்டு  சாதனை புரிந்துள்ளது.

🗒️ உலகின் மிக இளம் வயது பேராசிரியர் என்ற சாதனையை அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த நாதன் தாமஸ், (18 வயது) படைத்துள்ளார். அவர் 306 ஆண்டு கால சாதனையை முறியடித்து பலரது கவனத்தை பெற்றார்.

 விளையாட்டுச் செய்திகள்

🏀 சிட்டி ஓபன் டென்னிஸ்: பரபரப்பான இறுதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி அலெக்சாண்டர் ஈலா சாம்பியன் பட்டம் வென்றார். 

🏀 கடைசி டி20 கிரிக்கெட்:  இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி.

Today's Headlines

🗒️ A State Council meeting on the development plans for Scheduled Castes and Scheduled Tribes was held under the leadership of Chief Minister Vijay.

🗒️ Indian Railways handled a record 140 million tonnes of goods in July.

🗒️ Nathan Thomas, an 18-year-old from Florida, USA, has become the youngest professor. He broke a 306-year-old record and attracted worldwide attention.

🏀 Sports News

🏀 City Open Tennis: Alexander Eala played very well in an exciting final match and won the championship.

🏀 Last T20 Cricket Match: Pakistan defeated Sri Lanka and won the match.

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி