UPI பரிவர்த்தனை: இனி வங்கிகள் கட்டணம் வசூலிக்கலாம்... யாருக்கு என்ன பாதிப்பு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 6, 2026

UPI பரிவர்த்தனை: இனி வங்கிகள் கட்டணம் வசூலிக்கலாம்... யாருக்கு என்ன பாதிப்பு?

 

யுபிஐ மூலம் ரூ.2,000-க்கு மேல் மேற்​கொள்​ளப்​படும் வணி​கப் பரிவர்த்​தனை​களுக்கு 0.25% முதல் 0.4% வரை கட்​ட​ணம் (எம்​டிஆர் - வணி​கர் தள்​ளு​படி வீதம் ) விதிக்க மத்​திய அரசு அனுமதி அளிக்​கக்​கூடும் என தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் நாடாளு​மன்​றத்​தில் தாக்​கல் செய்த வரி விதிப்பு மற்​றும் பிற சட்​டங்​கள் (திருத்த) மசோ​தா​வில் வங்​கி​களும் சேவை நிறு​வனங்​களும் மின்​னணு பரிவர்த்​தனை​களுக்கு கட்​ட​ணம் வசூலிப்​ப​தற்​கான தடையை நீக்க முன்​மொழிந்​துள்​ளார். இதையடுத்​து, ரூ.2,000-க்கு மேலான யுபிஐ பரிவர்த்​தனை​களுக்கு 0.25% முதல் 0.4% வரை கட்​ட​ணம் விதிக்க வாய்ப்​புள்​ள​தாக கூறப்​படு​கிறது.

அரசு புள்​ளி​விவரங்​களின்​படி, மொத்த யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்​ணிக்​கை​யில் ரூ.2,000-க்கு மேற்​பட்ட பரிவர்த்​தனை​களின் பங்கு 5% மட்​டுமே. ஆனாலும், இவை மொத்த பரிவர்த்​தனை மதிப்​பில் 65% பங்​கைக் கொண்​டுள்ளன என்​பது குறிப்​பிடத்​தக்​கது. கிரெடிட் கார்​டு​களைப் போல் அல்லாமல், இதில் நிதி மூலதனச் செலவு இல்​லாத​தால், வசூலிக்கப்​படும் கட்​ட​ணத்​துக்கு ஒரு குறிப்​பிட்ட உச்​சவரம்பு நிர்ண​யிக்​கப்பட வாய்ப்​புள்​ளது.

அதி​காரி​களின் கூற்​றுப்​படி, ரூ.2,000-க்கு உட்​பட்ட பரிவர்த்​தனைகளுக்​குக் கட்​ட​ணம் இல்​லை. இதனால் காய்​கறி, பால், மளிகைப் பொருட்​கள் வாங்​கு​வது மற்​றும் ஆட்​டோ, டாக்சி கட்டணம் செலுத்​து​வது போன்ற அன்​றாட சிறு செல​வு​கள் இதனால் பாதிக்​கப்படாது. எனவே, 95% பரிவர்த்​தனை​கள் இந்த கட்டண வரம்​பிற்​குள் வராது. மேலும், வணி​கர்​கள் இந்​தக் கட்டணத்தை வாடிக்​கை​யாளர்​கள் மீது சுமத்​து​வார்​களா அல்​லது தாங்​களே ஏற்​றுக்​கொள்​வார்​களா என்​பது அவர்​களின்​ விருப்பத்தைச்​ சா​ர்​ந்​தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி