மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்ட பணிகள் நிறைவு: சுய கணக்கெடுப்பு தளத்தில் 10.61 லட்சம் குடும்பங்கள் விவரம் சமர்ப்பிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2026

மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்ட பணிகள் நிறைவு: சுய கணக்கெடுப்பு தளத்தில் 10.61 லட்சம் குடும்பங்கள் விவரம் சமர்ப்பிப்பு

 

மக்​கள்​தொகைக் கணக்​கெடுப்பு என்​பது நாட்​டின் எதிர்​கால வளர்ச்​சி​யைத் திட்​ட​மிடு​வதற்​கான மிக முக்​கிய அடிப்​படைத் தரவு ஆதா​ர​மாகும்.

கல்​வி, சுகா​தா​ரம், வேலை​வாய்ப்​பு, வீட்டு வசதி போன்ற மக்​களின் அடிப்​படைத் தேவை​களுக்​கான அரசுத் திட்​டங்​களை வடிவ​மைப்​பது மற்​றும் அடிப்​படை வசதி​களை மேம்​படுத்​து​வதை நோக்​க​மாக கொண்​டு, இந்​தி​யா​வில் முதல்​கட்ட மக்​கள்​தொகைக் கணக்​கெடுப்பு (வீடு​கள் பட்​டியலிடு​தல்) கடந்த ஏப். 1-ம் தேதி அதி​காரப்​பூர்​வ​மாகத் தொடங்​கியது.

தமிழகத்​தில் முதல்​கட்ட கணக்​கெடுப்​பான களப்​பணி​கள் ஆக. 1-ம் தேதி முதல் தொடங்​கியன. வீடு வீடாகச் சென்று கணக்​கெடுப்பு நடத்​து​வதற்கு

முன்​ன​தாக, நடப்​பாண்​டில் ஜூலை 17 முதல் 31-ம் தேதி வரை சுய கணக்​கெடுப்​புக்​கான தளம் உரு​வாக்​கப்​பட்​டது. இதன்​மூலம், குடி​யிருப்​பாளர்​கள் தங்​கள் குடும்ப விவரத்தை அதி​காரப்​பூர்வ மக்​கள்​தொகை கணக்​கெடுப்பு இணை​யதளம் வழி​யாக சமர்ப்​பிக்க வழி​வகை செய்​யப்​பட்​டது.

முதல்​கட்ட கணக்​கெடுப்பு பணி​களில் நகர்ப்​புறம் மற்​றும் கிராமப்​புறங்​களில் 1.15 லட்​சத்​துக்​கும் அதி​க​மான கணக்​கெடுப்​பாளர்​களும் 19 ஆயிரத்​துக்​கும் அதி​க​மான மேற்​பார்​வை​யாளர்​களும் ஈடு​படுத்​தப்​பட்​டனர். கணக்​கெடுப்பு பணி​யின்​போது, கணக்​கெடுப்​பாளர்​கள் 33 முக்​கியக் கேள்வி​களுக்கு பதில்​களை சேகரித்​தனர். இப்​பணி​கள் நேற்​றுடன் நிறைவடைந்​தன.

இதுகுறித்​து, தமிழகம் மற்​றும் புதுச்​சேரிக்​கான மக்​கள்​தொகை கணக்​கெடுப்பு இயக்​குநர் எம்​.சுந்​தரேஷ்​பாபு கூறிய​தாவது: மக்​கள்​தொகை கணக்​கெடுப்பு முதல்​கட்​டத்​தில் சுமார் ஒன்​றரை லட்​சம் பேர் பணி​யில் ஈடு​பட்​டனர்.

இப்​பணியை எவ்​விதத் தடங்​கலுமின்றி நிறைவு செய்​வதை உறு​தி​செய்த அனைத்​துக் கணக்​கெடுப்​பாளர்​கள், மேற்​பார்​வை​யாளர்​கள், நிர்​வாகப் பணி​யாளர்​களின் அர்ப்​பணிப்​பு, முயற்​சிகளுக்கு பாராட்​டு​கள்.

மக்​கள்​தொகைக் கணக்​கெடுப்​புக்​கான இந்த முக்​கி​யத் தரவு சேகரிப்​புப் பணிக்​காக அளிக்​கப்​பட்ட விலை ம​திப்​பற்ற ஆதர​வுக்​கும், ஒத்​துழைப்​புக்​கும் மக்​கள், மாநில அரசு உள்பட அனை​வருக்​கும் பாராட்​டு​களை தெரிவிக்​கிறோம்.

ஜூலை 17-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சுய கணக்​கெடுப்பு தளத்​தில் 10.61 லட்​சம் குடும்​பங்​கள் தங்​கள் விவரங்​களை சமர்ப்​பித்​துள்​ளன. முதல்​கட்ட கணக்​கெடுப்பு நிறைவடைந்​துள்ள நிலை​யில், தொழில்​நுட்ப தரவு​களை இணைக்​கும் பணி ஒரு சில நாட்​கள் நடை​பெறும்.

1948-ம் ஆண்டு மக்​கள்​தொகைக் கணக்​கெடுப்​புச் சட்​டத்​தின்​படி, இந்த செயல்​பாட்​டின் போது சேகரிக்​கப்​படும் அனைத்​துத் தனி​நபர்​ பதில்​களும்​ ரகசி​ய​மாக வைக்​கப்​படும்​. இரண்​​டாம்​ கட்​ட​மான மக்​கள்​ தொகைக்​ கணக்​கெடுப்​பு அடுத்​த ஆண்​டு ஜனவரி, பிப்​ர​வரி ​மாதங்​களில்​ ​நாடு முழு​வதும்​ மேற்​கொள்​ளப்​படும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி