தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்: தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 13, 2026

தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்: தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி

 

தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் அரசு - தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கான முதல் கட்டகலந்தாய்வு நிறைவடைந்துள் ளது. மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் நடத்திய கலந்தாய்வில் 9,437 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் நிரப்பட்டுள்ளன. 2-ம் சுற்று கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த சுற்றில் இடஒதுக்கீடு பெற்றவர்களின் விவரங்கள் செப்.15-ம் தேதி வெளியிடப்படவுள்ளது. இடஒதுக்கீடு பெற்றவர்கள் 18-ம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள தனியார் மருத்துவ கல்லூரிக்கு 150 எம்பிபிஎஸ் இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல், 2 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தலா 50 எம்பிபிஎஸ் இடங்களுக்கு ஆணையத்தின் அனுமதி கிடைத்துள்ளது. இந்த 250 இடங்களும், நடைபெறும் 2-ம் சுற்று மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் சேர்க்கப்பட்டுள்ளது. 2-ம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்று ஏற்கெனவே இடங்களை எடுத்த மாணவர்கள், மறுஒதுக்கீட்டுக்கு கோரி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி