காலாண்டுத் தேர்வு இன்றுடன் நிறைவு: நாளை முதல் அக்.4 வரை விடுமுறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 25, 2026

காலாண்டுத் தேர்வு இன்றுடன் நிறைவு: நாளை முதல் அக்.4 வரை விடுமுறை

 

பள்​ளிக்​கல்​வித் துறை இயக்​குநர் லதா, தொடக்​கக் கல்​வித் துறை இயக்​குநர் பூ.ஆ.நரேஷ் ஆகியோர் வெளி​யிட்ட அறி​விப்​பு;

தமிழகத்​தில் பள்​ளிக்​கல்வி பாடத்​திட்​டத்​தைப் பின்​பற்​றும் அனைத்து வித​மான பள்​ளி​களி​லும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை​யான மாணவர்​களுக்​கான முதல் பரு​வம் மற்​றும் காலாண்​டுத் தேர்வு கடந்த செப்​டம்​பர் 16-ம் தேதி தொடங்கி நடை​பெற்​று​வரு​கிறது.

இந்த தேர்​வு​கள் இன்​றுடன்​(செப்​டம்​பர் 25) நிறைவு பெறுகின்​றன. இதைத்​தொடர்ந்து மாணவர்​களுக்கு செப்​டம்​பர் 26 முதல் அக்​டோபர் 4-ம் தேதி வரை விடு​முறை வழங்​கப்​படும். இந்த விடுப்பு முடிந்து பள்​ளி​கள் மீண்​டும் அக்​டோபர் 5-ம் தேதி திறக்​கப்​படும்.

இதுத​விர விஜயதசமி நாளில் அரசு, அரசு உதவி பெறும் பள்​ளி​களில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடை​பெற உரிய நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்பட வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

சிறப்பு வகுப்​பு​க்கு தடை

இதுத​விர, இந்த காலாண்டு விடு​முறை நாட்​களில் சிறப்பு வகுப்​பு​கள் நடத்​தக்​கூ​டாது, மாணவர்​களை சுற்​றுலா​வுக்கு அழைத்​துச் செல்​லக்​கூ​டாது.

விடு​முறை நாட்​கள் மழைக்​கால​மாக இருப்​ப​தால் பாது​காப்பு சார்ந்த அறி​வுரைகளை தலை​மை​யாசிரியர்​கள் மாணவர்​களுக்கு வழங்க வேண்​டும் என்று மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வல​கங்​கள் வாயி​லாக பள்​ளி​களுக்கு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி