மும்மொழி திட்டத்தில் இருந்து 6-ம் வகுப்புக்கு விலக்கு: சிபிஎஸ்இ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 29, 2026

மும்மொழி திட்டத்தில் இருந்து 6-ம் வகுப்புக்கு விலக்கு: சிபிஎஸ்இ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

 மும்மொழி திட்​டத்​திலிருந்து 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்​டுமென, சிபிஎஸ்இ-க்கு உச்ச நீதிமன்றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தேசி​யக் கல்விக் கொள்கை 2020 மற்​றும் தேசி​ய பாடத்​திட்​டக் கட்டமைப்பு 2023 ஆகிய​வற்​றின்​படி, 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்கள் 2 இந்​திய மொழிகள் உட்பட 3 மொழிகளைக் கற்க வேண்​டுமென கடந்த மே 15-ம் தேதி சிபிஎஸ்இ சுற்​றறிக்கை வெளி​யிட்​டது.

முன்​ன​தாக, ஏப்​ரல் 9-ம் தேதி சுற்​றறிக்​கை​யில் இந்த நடை​முறை 2029-30 கல்​வி​யாண்டு வரை ஒத்தி வைக்​கப்​ப​தாகக் கூறப்​பட்ட நிலை​யில், திடீரென மும்​மொழித் திட்​டம் உடனடி​யாகக் அமலாக்​கப்​படு​வதை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன.

இவ்​வழக்கில் மத்​திய அரசின் வாதத்தை நிராகரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலை​மையி​லான அமர்​வு, “மாணவர்​களின் கல்​விச் சுமையை கருத்​தில் கொண்டு மும்​மொழிக் கொள்​கையை படிப்​படி​யாக அமல்​படுத்த வேண்​டும்.

மாணவர்​களுக்கு சிரமத்தை ஏற்​படுத்த விரும்​ப​வில்​லை. அவர்​களுக்கு தேவை​யான வசதி​யைத்​தான் வழங்க விரும்​பு​கிறோம். நடப்​பாண்டு 7, 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்​களுக்கு வழங்​கப்​பட்ட விலக்கு 6-ம் வகுப்​புக்​கும் பொருந்​தும்” என தெரி​வித்​து, அதனைச் செயல்​படுத்த சிபிஎஸ்​இ-க்கு உத்​தர​விட்​டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி