தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்(என்சிஇஆர்டி) வெளியிட்ட செய்திக்குறிப்பு: 9-ம் வகுப்பு கணிதப் பாடத்திட்டத்தில் இருந்து எந்தவொரு ஒட்டுமொத்த தலைப்பும் நீக்கப்படவில்லை. மாணவர்கள் வெறும் மனப்பாடம் செய்வதைத் தவிர்த்து, கருத்தியல் ரீதியாகப் புரிந்துகொள்ளும் வகையில் பாடங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கோடுகள் மற்றும் கோணங்கள், யூக்ளிடியன் வடிவவியல் போன்ற பாடங்கள் தனியாக இல்லாமல், 5, 6, 9, 12, 13 ஆகிய அத்தியாயங்களுக்குள் விரிவாக சேர்க்கப்பட்டுள்ளன.
பாரம்பரியமான தேற்றம் மற்றும் நிரூபணங்களுக்குப் பதிலாக, செயல்முறை வழிக் கற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்து வரும் தற்போதைய காலகட்டத்தில், அல்காரிதம்கள், தரவு அமைப்புகள் ஆகியவற்றின் அடிப்படைக் கணிதத்தை மாணவர்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும்.
எனவே, தேசிய கல்விக் கொள்கை பரிந்துரையின்படி, 9-ம் வகுப்பு கணிதத்தில் ‘அல்காரிதம்கள்’ குறித்த புதிய அத்தியாயம் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகி இருப்பது வெறும் ‘வரைவுப் பாடத்திட்டம்’ மட்டும்தான். ஆசிரியர்கள், கல்வியாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் திருத்தப்பட்ட இறுதிப் பாடத்திட்டம் அடுத்த அக்டோபரில் வெளியிடப்படும்.
மேலும், தேசியக் கல்விக் கொள்கையின்படி கல்வியானது திறன் சார்ந்ததாக இருக்க வேண்டும். எனவே பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள், பாடப்புத்தகத்தில் உள்ள தலைப்புகளின் எண்ணிக்கையை மட்டும் வைத்துப் பாடத்திட்டத்தை எடைபோட வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான 9-ம் வகுப்புக்கான என்சிஇஆர்டி வரைவுப் பாடத்திட்டத்தில் யூக்ளிடியன் வடிவவியல் உட்பட சில முக்கியக் கணிதப் பாடங்கள் நீக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் பரவியதை அடுத்து என்சிஇஆர்டி இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி