மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் மணிபாரதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல் பிரிவுக்குத் தேவையான தகுதியான ஆசிரியர்களை நியமிக்கக் கோரியும், சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் சுற்றுச்சுவர், சிசிடிவி கேமராக்கள், நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் அமைக்கவும், காவலாளி மற்றும் துப்புரவுப் பணியாளர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர், பிற பள்ளிகளிலிருந்து பணிப் பகிர்வு முறையில் வரும் ஆசிரியர்கள் வாரம் சில நாட்கள் மட்டுமே வருகை தருவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே, மாணவர்களின் கல்வியை பேண ஆசிரியர்கள் ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில் வகுப்புகள் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அரசு பரிசீலிக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகப் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மூலம் தனிக் கணக்கு ஒன்று தொடங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். இதுதொடர்பான சாத்தியக் கூறுகளைப் பள்ளிக்கல்வி இயக்குநர் ஆய்வு செய்து, அது நடைமுறைப்படுத்தக் கூடியதாக இருந்தால் நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.17க்கு தள்ளி வைத்தனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி