அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி: திட்டம் பரிசீலனையில் உள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2026

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி: திட்டம் பரிசீலனையில் உள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

 

அரசுப் பள்ளி மாணவர்​களுக்கு சிக்கன் பிரி​யாணி வழங்​கும் திட்​டம் குறித்து சென்னை தலை​மைச் செயல​கத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அமைச்சர் ராஜ்மோகன் கூறிய​தாவது: காலை உணவுத் திட்​டம் விரி​வாக்​கத்​தால் கூடு​தலாக 15.30 லட்​சம் மாணவர்​கள் பயன்​பெறு​வார்​கள்.

மாணவர்​களுக்கு ஊட்​டச்​சத்து கிடைப்​ப​தன் மூலம் கல்வி வளர்ச்சி அதி​கரிக்​கும். இதற்​காக பல்​வேறு துறை​கள் ஒருங்​கிணைந்து செயல்​பட்​டு, பள்​ளி​களில் சமையலறை, பாத்​திரங்​கள், கட்​டமைப்பு வசதி​களை மேம்​படுத்​தும் பணி​கள் நடந்து வரு​கின்​றன.

புதிய உணவு வகைகள் பட்​டியல் உரு​வாக்க சிறப்​புக் குழு அமைக்​கப்பட உள்​ளது. பள்​ளிக் குழந்​தைகளுக்கு சிக்கன் பிரி​யாணி வழங்​கலாம் என்ற விருப்​பம் முதல்​வருக்கு உள்​ளது.

இத்​திட்​டம் பரிசீலிக்​கப்​பட்டு வரு​கிறது. சுகா​தா​ர​மான முறை​யில் சிக்​கன் பிரி​யாணி தயாரித்து வழங்​கு​வது குறித்து ஆய்வு செய்​து, மாணவர்​களுக்கு சிக்​கன் பிரி​யாணி வழங்க ஏற்​பாடு செய்​யப்​படும்.

தமிழகத்​தில் எப்​போதும் இரு​மொழிக் கொள்​கை​தான். அதில் அரசு உறு​தி​யாக உள்​ளது. ஓராசிரியர் பள்​ளி​களில் மாணவர் - ஆசிரியர் விகிதத்தை சரிசெய்​யும் பணி நடந்து வரு​கிறது என்று அவர்​ கூறி​னார்​.

3 comments:

  1. ஆக்கபூர்வமான திட்டங்களை செயல்படுத்த மதிப்புமிக்க கல்வி அமைச்சர் ஐயா நடவடிக்கை எடுக்க வேண்டும் , ஏராளமான அரசு பள்ளிகளில் தன்னார்வலர்கள் உதவியுடுன் உதாரணமாக ரோட்டரி கிளப் மற்றும் பல சேவை செய்யும் அமைப்பு மூலமாக தரமான கழிப்பறை வசதி , குடிநீர் வசதி , பள்ளி மாணவர்கள் அமர்ந்து படிக்க நாற்காலிகள் , பள்ளிக்கல்வித்துறையில் வருத்தத்துடன் பணிபுரியும் பலவேறு ஊழியர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் , சத்துணவு சிக்கன் பிரியாணி ஆசை வரவேற்கத்தக்கது. முதலில் தரமான பொன்னி அரிசி சாப்பாடு காய்கறி அதிகமா சேர்த்த சாம்பார் , சாம்பாரில் பருப்பு மட்டுமே பல பள்ளிகளில் , மேலும் நாம் வீட்டில் பயன்படுத்தும் அளவில் உள்ள முட்டை வேண்டும் குருவி முட்டை எதற்காக வாடை வராமல் புதிய முட்டை கிடைக்க நடவடிக்கை தேவை , தரமான காய்கறிகளுடுன் கூட்டு பொரியல் ஏதாவது ஓன்று அவசியம் மாணவர்களுக்கு கீரை உட்பட , பெயருக்கு உணவு சத்துணவு ஆகாது

    ReplyDelete
  2. காய்கறிகள் வாடிவதங்கி இருந்தாலும்கூட மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்படாது ஆனால் சிக்கன் வாங்குபவரோ, விற்பவரோ கவனக்குறைவாகவோ அல்லது பேராசைக்காக கெட்டுப்போன சிக்கன் கறியை மாணவர்களுக்கு உணவாக கொடுத்தால்,பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.மாணவர்களின் உயிரைவிட வேறெதுவும் முக்கியமில்லை

    ReplyDelete
  3. இது தேவையில்லாத வேலை.சில இடங்களில் பணத்திற்கு ஆசைப்பட்டு இறந்து போன பழைய கோழி இறைச்சி குழந்தைகளுக்கு கொடுக்கும் போது உயிர் போகும் அபாயமே ஏற்படுகிறது. அரசு இதனை அமல்படுத்தக் கூடாது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி