தன்னுடைய வருவாயில், குறிப்பிட்ட பகுதியை ஏழை மாணவர்கள் கல்விக்கும், நலிவடைந்தோர் வாழ்வுக்கும் கொடுத்து உதவியுள்ளார் சாலமன் பாப்பையா.
சமீபத்தில் தான் பயின்ற மதுரை மாநகராட்சி வெள்ளி வீதியார் மேல்நிலைப் பள்ளியின் புதிய வகுப்பறை கட்டுமானப் பணிக்கு ரூ.20 லட்சம் வழங்கி உருக்கமாகப் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “நான் இந்த பள்ளியில் கற்ற சிறு வயது நாட்கள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அந்த காலத்தில் பள்ளி வளாகத்தில் சேட்டை செய்யும் மாணவர்களை, நன்றாக படிக்கும் மாணவர்கள் குறித்து வைத்து தலைமை ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும். அவர், பிரம்பால் அடிப்பார். அந்த காலத்தில் பிரம்பை வைத்து அடிக்க ஆசிரியர்கள் பயப்படமாட்டார்கள்.
பள்ளிகளுக்கு வராத பிள்ளைகளுக்கு காலில் சங்கிலியை போட்டு பெற்றோரே கட்டி வைத்து விடுவர். நாங்கள் வீட்டுக்குச் சென்று அவர்களைப் பள்ளிக்கு அழைத்து வர வேண்டும். வரும் வழியில் எங்களை அந்த மாணவர்கள் சில நேரம் அடித்துவிட்டு தப்பி விடுவர். இப்படி அடி வாங்கினாலும் பரவாயில்லை, பள்ளிக்கு வராத மாணவர்களைக் கூப்பிட போனால் வகுப்பு இல்லை என்ற சந்தோஷம் இருக்கும்.
காலையில் கிடைக்கிற கால் வயிற்று கஞ்சியை குடித்துவிட்டு பசியோடு பள்ளிக்கு வந்து படித்தேன். ஆசிரியர்களின் கனிவான கண்டிப்பால்தான் இன்று நான் உரமாக நிற்கி றேன். இன்றைய மாணவர்கள் ஆசிரியர்களை மதிப்பதில்லை. அவர்களுக்கு பயப்படுவதில்லை. நாங்களெல்லாம் ஆசிரியர்களுக்கு ரொம்பவே பயந்தோம். எங்களுடைய பயத்தின் பலனை இப்போது அனுபவிக்கிறோம்” என்றார்.
- பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவையொட்டிய பகிர்வு

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி