காலை உணவுத் திட்டம் சார்ந்து கவனக்குறைவாக செயல்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு செயலாளர் அறிவிப்பு!
கடலூர் மாவட்டம், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் விரிவாக்கம் செய்வது தொடர்பாக அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது சார்ந்து செய்தி குறிப்பு.
கடலூர் மாவட்டம், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது சார்ந்து 09.09.2026 அன்று முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் உதவிபெறும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட சுற்றறிக்கை தொடர்பாக, மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் அவர்களின் அறிவுரையின் பேரில் கவனக்குறைவாக செயல்பட்ட பணியாளர்கள் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த மாவட்ட நிருவாகமும் உள்ளாட்சி அமைப்புகளும் இணைந்து பள்ளிகளுக்கு தேவையான தட்டுகள், டம்ளர்கள் மற்றும் சிறிய பராமரிப்பு பணிகள் ஆகியவற்றை உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் நிதியிலிருந்து மேற்கொள்ள வேண்டுமென 03.09.2026 அன்று மாவட்ட ஆட்சியரால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி