CPS திட்ட ஓய்வூதியருக்கு ‘டேப்ஸ்’ திட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் மாரிமுத்து வேண்டுகோள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 9, 2026

CPS திட்ட ஓய்வூதியருக்கு ‘டேப்ஸ்’ திட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் மாரிமுத்து வேண்டுகோள்

 

சிபிஎஸ் திட்​டத்​தில் ஓய்​வு​பெற்ற அனைத்து அரசு ஊழியர்​களுக்​கும் ‘டேப்​ஸ்’ ஓய்​வூ​திய திட்​டம் நடை​முறைப்​படுத்​தப்பட வேண்​டும் என்று சட்​டப்​பேர​வை​யில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி உறுப்​பினர் க.மாரி​முத்து வேண்​டு​கோள் விடுத்​தார்.

சட்​டப்​பேர​வை​யில் நேற்று மானியக் கோரிக்​கைகள் மீதான விவாதத்​தில் அவர் பேசி​ய​து: ஊரக வளர்ச்​சித் துறை​யில் நீண்ட கால​மாக பணி​யாற்றி வரும் தற்​காலிக பணி​யாளர்​களை பணிநிரந்​தரம் செய்ய வேண்​டும். முதி​யோர் ஓய்​வூ​திய திட்​டத்​தில் விண்​ணப்​பித்தோருக்கு ஓய்​வூ​தி​யம் வழங்க வேண்​டும்.

அரசு போக்​கு​வரத்​துக் கழ​க ஊழியர்​களுக்​கான ஓய்​வூ​திய திட்​டம் சரி​யாக செயல்​படுத்​தப்​பட​வில்​லை. ஓய்​வூ​திய பலன்​கள் கிடைக்க தொடர்ந்து போராடி கொண்​டிருக்​கிறார்​கள். பங்​களிப்பு ஓய்​வூ​திய திட்​டம் (சிபிஎஸ்) நடை​முறைப்​படுத்​தப்​பட்ட கடந்த 1.4.2003 முதல் 31.12. 2025 வரை பணி​யாற்றி ஓய்​வு​பெற்​றவர்​கள் ஓய்​வூ​திய பலன்​கள் கிடைக்​காதா என ஏங்​கிக் கொண்​டிருக்​கிறார்​கள்.

தேர்​தல் வாக்​குறு​தி​யின்​படி அரசு ஊழியர்​களுக்கு பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும். இல்​லாத​பட்​சத்​தில் கடந்த ஜன.1 முதல் ஓய்​வு​பெற்ற ஊழியர்​களுக்கு நடை​முறைப்​படுத்​தப்​படு​வதைப் போன்​று, சிபிஎஸ் திட்​டத்​தில் ஓய்​வு​பெற்ற அனைத்துஊழியர்​களுக்​கும் தமிழ்​நாடு உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​திய திட்​ட​மான டேப்ஸ் திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும்.இவ்​வாறு பேசி​னார்.

1 comment:

  1. எந்த ஒய்வு ஊதியமும் கிடைக்காது,பெரிய பட்டை நாமம் கிடைக்கும் கோவிந்தா கோவிந்தா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி