மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, அனைத்து வகை பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர, ஆசிரியர் தகுதித் தேர்வு எனும், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும்.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும், 'டெட்' தேர்வு எழுதுவது கட்டாயம் என, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சிறப்பு 'டெட்' தேர்வு
இதனிடையே ஆசிரியர்களின் நலனுக்காக, தமிழக அரசின் சார்பில், ஆண்டுக்கு மூன்று சிறப்பு 'டெட்' தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, அரசு பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், கடந்த ஜூலை மாதம் சிறப்பு தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது.
இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வை 58,902 பேர் எழுதினர். பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வை 1,58,617 பேர் எழுதினர். 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற்ற நிலையில் தகுதி மதிப்பெண்ணாக, பொதுப் பிரிவினருக்கு 90, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 75, எஸ்.சி., எஸ்.டி.. பிரிவினருக்கு 60 மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட்டது.
தேர்வு முடிவுகள்
இந்நிலையில், பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் நள்ளிரவு வெளியிடப்பட்டது. இதில், டெட் முதல் தாள் தேர்வில் 47,594 பேர், இரண்டாம் தாள் தேர்வில், 60,732 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1.10 லட்சம் பேர் தோல்வி
முதல் மற்றும் இரண்டாம் தாள் என, மொத்தமாக தேர்வு எழுதிய 2,17,519 ஆசிரியர்களில், 1,08,326 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். சுமார் 1.10 லட்சம் பேர் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர்.
சிறப்பு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், அடுத்த 5 நாட்களில், தங்களின் தகுதி சான்றிதழ்களை https://trb.tn.gov.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி