அண்ணா பல்கலைக்கழக கோவை வளாகத்தில் இணைப் பேராசிரியராக பணியாற்றி வரும் முனைவர் ஜெ.வெங்கடேஷ் தனது இடைநீக்கம் மற்றும் தனக்கு பிறப்பிக்கப்பட்ட குற்றக் குறிப்பாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி மும்முனேனி சுதீர் குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா, “மனுதாரரின் பணி அனுபவச் சான்றிதழ்கள் கடந்த 2008-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தால் சரிபார்க்கப்பட்ட பின்னரே அவருக்கு இணைப் பேராசிரியராக பணி ஆணை வழங்கப்பட்டது.
அதன்பிறகும் கோவை அண்ணா பல்கலைக்கழகம், சென்னையுடன் இணைக்கப்பட்டபோதும் பல்வேறு காலகட்டங்களில் மனுதாரரின் பணிப்பதிவேடுகள் சரிபார்க்கப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலைக்கழக முறைகேடுகள் தொடர்பாகவும், பல்கலைக்கழக டீன் முனைவர் எம். சரவணக்குமாருக்கு எதிராக உரிமையியல் மற்றும் குற்றவியல் ரீதியாக வழக்கு தொடர்ந்த நிலையில் தற்போது பழிவாங்கும் நோக்கத்தில் சில குறிப்பிட்ட ஆவணங்களை மட்டும் சரிபார்ப்புக்கு அனுப்பி அதன்மூலம் மனுதாரருக்கு குற்ற குறிப்பாணை வழங்கி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கை முற்றிலும் தன்னிச்சையானது” என வாதிட்டார். இதற்கு அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மும்முனேனி சுதீர் குமார், மனுதாரரின் இடைநீக்கம் மற்றும் குற்றச்சாட்டு குறிப்பாணை தொடர்பான ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி