மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்ய அறிவுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 8, 2026

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்ய அறிவுறுத்தல்

 

அரசு தொடக்க, நடுநிலைப் பள்​ளி​களில் மாணவர்​கள் எண்​ணிக்​கைக்கு ஏற்ப ஆசிரியர் பணி​யிடங்​களை நிர்​ண​யம் செய்ய வேண்​டுமென தொடக்​கக் கல்​வித்​துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தொடக்​கத் துறை கல்வி இயக்​குநர் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்​டக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பிய சுற்றறிக்கை விவரம்: இலவச கட்​டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்​படி ஆண்​டு​தோறும் மாணவர் எண்​ணிக்​கைக்கு ஏற்ப ஆசிரியர் பணி இடங்​கள் நிர்​ண​யம் செய்​யப்பட வேண்​டும். தொடக்க, நடுநிலைப் பள்​ளி​களில் உள்ள ஆசிரியர் பணி​யிடங்​கள் நிர்​ண​யம் செய்​வதற்​கான பொறுப்பு சம்பந்​தப்​பட்ட மாவட்​டக் கல்வி அதி​காரி​களுக்கே (தொடக்​கக் கல்​வி) உள்​ளது.

அதன்​படி நடப்​பாண்டு கடந்த ஆக.1-ம் தேதி நில​வரப்​படி மாணவர்​கள் எண்​ணிக்கை அடிப்​படை​யில் பணி நிர்​ண​யம் மேற்​கொள்​ளப்பட வேண்​டும். அளிக்கப்படும் விவரங்​கள் தவறானவை என கண்​டறியப்​பட்டால், சம்​பந்​தப்​பட்ட அலு​வலர்களே பொறுப்​பேற்க நேரிடும்.

மேலும், எண்ணிக்கை குறித்த அறிக்​கையை இயக்​குநரகத்​தில் அக்​.21 முதல் 28-க்​குள் தங்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட நாட்​களில் சமர்ப்​பிக்க வேண்​டும். அந்​தந்த மாவட்​டக் கல்வி அதி​காரி​கள் இப்பணிகளை துரிதமாக மேற்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி