ரயில்களில் அதிக சத்தத்துடன் செல்போன் பயன்படுத்தினால் அபராதம், சிறை தண்டனை: தெற்கு ரயில்வே எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 19, 2026

ரயில்களில் அதிக சத்தத்துடன் செல்போன் பயன்படுத்தினால் அபராதம், சிறை தண்டனை: தெற்கு ரயில்வே எச்சரிக்கை

 

ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் ஹெட்போன் இல்லாமல் செல்போனில் அதிக சத்தத்துடன் இசை கேட்பது, வீடியோக்கள் அல்லது ரீல்ஸ் பார்ப்பது மற்றும் கேம்கள் விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.

ரயில்களில் பொது மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தடுப்பதையும், சக பயணிகளுக்கு தொந்தரவு இல்லாத பயணத்தை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு தெற்கு ரயில்வே இந்த முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

செல்போனை அதிக சத்தத்துடன் பயன்படுத்துவதால் இடையூறுகள் ஏற்படுவதாக பல பயணிகள் புகார் அளித்துள்ளனர்.

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் சில பயணிகள் அதிக சத்தத்துடன் செல்போனில் இசை கேட்பது, வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ் பார்ப்பது அல்லது கேம்களை விளையாடுவது போன்றவற்றில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு இடையூறு விளைவிப்பதாக தெற்கு ரயில்வே பயணிகள் ஆலோசனைக் குழுவினர் தெரிவித்தனர்.


இதனை அடுத்து, ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அதிக சத்தத்துடன் இசை கேட்பது, வீடியோக்கள் அல்லது ரீல்ஸ் பார்ப்பது மற்றும் கேம்கள் விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என பயணிகளை தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.

திருத்தப்பட்ட ரயில்வே சட்டத்தின்படி, விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது இவை இரண்டும் விதிக்கப்படலாம். மேலும், எச்சரிக்கைகளை மீறித் தொடர்ந்து இடையூறு விளைவிக்கும் பயணிகளுக்கு 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

இது தொடர்பாக அனைத்து ரயில்வே கோட்டங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையை வசூலிக்க டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் மூத்த வணிகப் பிரிவு அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

செல்போனில் இசை கேட்கும்போதோ அல்லது வீடியோக்களைப் பார்க்கும்போதோ ஹெட்போன்களைப் பயன்படுத்தவும், தொலைபேசி அழைப்புகளில் பேசும்போது மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பேசவும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி