தமிழகத்தில் வெளிநாட்டு பல்கலை. தொடங்க அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் கடும் எதிர்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 7, 2026

தமிழகத்தில் வெளிநாட்டு பல்கலை. தொடங்க அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் கடும் எதிர்ப்பு

 

தமிழ்​நாடு அரசு கல்​லூரி ஆசிரியர் கழகம் பொதுச்செய​லா​ளர் சோ.சுரேஷ் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: சென்னை வேளச்​சேரி​யில், ‘வெஸ்ட் ஆஸ்​திரேலியா யுனிவர் சிட்​டி’ என்ற பெயரில் வெளி​நாட்​டுப் பல்​கலைக்​கழகம் தொடங்க அனுமதி வழங்​கப்​பட்​டுள்​ளது.

அதில் இளநிலை பாடப்​பிரிவுகளான பிசினஸ் மேனேஜ் மென்ட், டேட்டா சயின்ஸ் முதலா​மாண்டு கல்விக்​கட்​ட​ணம் தலா ரூ.14.52 லட்​சம், ஏ.ஐ. பாடப்​பிரிவுக்கு ரூ.17.93 லட்​சம், எம்​பிஏ படிப்​புக்கு ரூ.23.10 லட்​சம் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தின் 21 பல்​கலைக் ​கழகங்​களில் பாதிக்கு மேல் நிரந்தர ஆசிரியர்​கள் இல்லை.

குறிப்​பாக, சென்னை பல்​கலைக்​கழகத்​தில் 515 ஆசிரியர்​களுக்கு 180 பேர், மதுரை காம​ராஜர் பல்​கலைக்​கழகத்​தில் 405 ஆசிரியர்களுக்கு 202 பேர், திருச்சி பார​தி​தாசன் பல்​கலைக்​கழகத்​தில் 230 ஆசிரியர்​களுக்கு 119 பேர் மட்​டுமே பணி​யாற்றி வரு​கின்​றனர்.

மேலும், 188 அரசு கலை, அறி​வியல் மற்​றும் கல்​வி​யியல் கல்லூரிகளில் 7,198 காலி​யிடங்​கள் உள்​ள​தாக தமிழக அரசின் அதி​காரப்​பூர்வ புள்ளி விவரம் குறிப்​பிடு​கிறது. தமிழகத்​தின் 90 சதவீத​மான ஏழை, எளிய மாணவர்​கள் உயர்​கல்வி பயிலும் அரசு பல்​கலைக்​கழகங்​கள், அரசு கல்​லூரி​களில் அடிப்​படை கட்டமைப்பு​களை ஏற்​படுத்​தாமல், வெளி​நாட்டு பல்​கலைக்​கழகத்தை தமிழகத்​திலே சிவப்பு கம்​பளம் விரித்து வரவேற்​கும் தமிழக அரசின் உயர்​கல்விக் கொள்​கை, சமூக நீதிக்கு எதி​ரான தாகும். இதற்கு எதி​ராக அனை​வரும் குரல்​கொடுக்க வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.

மார்க்​சிஸ்ட் கட்சி கண்​டனம்: மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “தமிழகத்தின் முதல் வெளி​நாட்டு பல்​கலைக்​கழக​மாக மேற்கு ஆஸ்​திரேலியா பல்​கலைக்​கழகத்தை வேளச்​சேரி​யில் நிறுவ அனுமதி வழங்​கப்​பட்​டுள்​ளது.

இதற்​கான இறுதி ஒப்​புதலை யுஜிசி வழங்​கி​யுள்​ளது. இதற்கு தமிழக அரசும் ஒப்​புதல் அளித்​துள்​ளது. இது மத்​திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் ஒரு பகுதியே ஆகும். இது கல்வி உரிமையை வணிக நலன்​களுக்கு அடகு வைப்​ப​தாக அமை​யும்.

தனி​யார் பல்​கலைக்​கழகங்​களை ஊக்​குவிக்​கிற சட்​டத் திருத்​தம் ஒன்றை கடந்த செப்​டம்​பரில் தவெக அரசு கொண்டு வந்​தது. அடுத்த தாக்​குதலாக அந்​நிய பல்​கலைக்​கழகத்​துக்கு அனு​மதி தந்துள்​ளது. அரசு பல்​கலைக்​கழகங்​கள், கல்​லூரி​களுக்கு போதிய ஆசி​ரியர்​கள், அடிப்​படை உள்​கட்​டமைப்பு வசதி​களை வழங்காமல், வெளி​நாட்​டுப் பல்​கலைக்​கழகங்​களை வரவேற்​பது தேசத்​தின் இறை​யாண்மை மீதான தாக்​குதலாகும்” என்று கூறியுள்​ளார்​.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி