ஆர்.டி.ஐ., மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன: தகவல் திரட்டுகிறது கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 23, 2026

ஆர்.டி.ஐ., மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன: தகவல் திரட்டுகிறது கல்வித்துறை

 

பள்ளிக்கல்வித்துறையில், தகவல் அறியும் உரிமைச்சட்டம் (ஆர்.டி.ஐ.,) மூலம், பொதுமக்கள் கேட்கும் தகவல்களுக்கு உரிய முறையில் பதிலளிப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கோபிநாத் என்பவர், 2024ல் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டம் வழியாக, பள்ளிக்கல்வித்துறைக்கு புகார் மனு அளித்தார். அம்மனுவுக்கு கல்வித்துறை அளித்த பதில் திருப்திகரமாக இல்லை என மேல்முறையீடு செய்தார். தமிழ்நாடு தகவல் ஆணையத்தில், சமீபத்தில் நடந்த நேரடி விசாரணையில், கல்வித்துறை உரிய தகவல்களை மனுதாரருக்கு அளிக்காதது தெரிந்துள்ளது. இதுபோன்ற அலட்சியங்களால், போதிய தகவல் கிடைக்காதோர் மேல்முறையீடு செய்வது, வழக்கு தொடுப்பது அதிகரிக்கிறது. இதனால் மாவட்ட வாரியாக ஆர்.டி.ஐ., மூலம் கேட்கப்பட்ட மனுக்கள் அதுசார்ந்த நடவடிக்கைகள் குறித்து, இயக்குனரகத்திற்கு தகவல் அளிக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காரணம் சொல்ல வேண்டும்

ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், ‘இனிவரும் காலங்களில், ஆர்.டி.ஐ., மனுக்கள் எதுவும் தேங்க கூடாது. உரிய கால இடைவெளியில் கேள்விகளுக்கான பதிலை அனுப்புவது அவசியம். பதில் திருப்திகரமாக இல்லை என்பதால், மேல்முறையீடு செல்லும் பட்சத்தில், உரிய மாவட்ட அலுவலர்களே, அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

 விதிவிலக்குக்கு உட்பட்ட தகவல்கள் கேட்டால், எதனால் பதில் அளிக்க முடியவில்லை என்ற காரணம் குறிப்பிட வேண்டுமென, இயக்குனரகத்தில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி