காலாண்டு விடுமுறை போதவில்லை - நீட்டிக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த மாணவர்கள் - ரசித்து சிரித்த மாவட்ட ஆட்சியர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 3, 2026

காலாண்டு விடுமுறை போதவில்லை - நீட்டிக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த மாணவர்கள் - ரசித்து சிரித்த மாவட்ட ஆட்சியர்

 

கலெக்டர் என்றும் பாராமல் காலாண்டு விடுமுறை நீட்டிக்குமாறு கோரிக்கை வைத்த அரசு பள்ளி மாணவர்கள் - ரசித்து சிரித்த மாவட்ட ஆட்சியர் 

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே கோட்டூரில் நடைபெற்ற நெல் கொள்முதல் மைய திறப்பு விழாவில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவரிடம் பள்ளி மாணவர்கள் "சார், லீவு விட்றதே 10 நாள் தான் சார்... பத்த மாட்டேங்குது சார்" என்று கோரிக்கை விடுத்தனர்.

ஆய்வுக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு முடித்து தனது வாகனத்தில் ஏறும் போது அங்கே பள்ளி மாணவர்கள் நின்று கொண்டிருப்பதை கவனித்தார் 

பின்பு வாகனத்தில் இருந்து திரும்பிய மாவட்ட ஆட்சியர் அங்கு நின்றிருந்த  மாணவர்களை கண்டு ஆட்சியர் அவர்களின் கூறைகளை கேட்டறிந்தார் 

அப்போது தங்களுக்கு விளையாட வாலிபால் உட்பட பல விளையாட்டு பொருட்கள் தேவை என்று கோரிக்கை வைத்த மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் உடன் சகஜமாக பேசி மகிழ்ந்தனர் 

அப்போது மாவட்ட ஆட்சியர் அவர்கள் தற்போது காலாண்டு விடுமுறை தானே பள்ளி தொடங்கியதும் நீங்கள் கூறிய விளையாட்டு உபகரணங்கள் உங்களை வந்து சேர தான் ஏற்பாடு செய்வதாகவும் மாணவர்கள் நன்றாக படிக்கும் படியும் அறிவுரைகளை கூறினார் 

அப்போது அங்கிருந்த சிறுவர்கள் சற்றும் யோசிக்காமல் தங்களுக்கு இந்த காலாண்டு விடுமுறை போதாது என்றும் பத்து நாட்கள் மட்டுமே விடுமுறை விடுவதாகவும் இந்த விடுமுறை மேலும் நீட்டிக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர் 

இதை சற்றும் எதிர்பார்க்காத மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் வாய் வட்டு சிரித்தனர் 

மேலும் மாணவர்களின் கோரிக்கை பற்றி பரிசீலிப்பதாகவும் விரைவில் அவர்களின் கோரிக்கையான விளையாட்டு உபகரணங்கள் பள்ளி வந்து சேரும் என்றும் தெரிவித்து சில நாட்கள் கழித்து அவர்களை பள்ளியிலே சந்திப்பதாகவும் கூறி சென்றார் 

இதனை சற்றும் எதிர்பார்க்காத மாணவர்கள் மற்றும் அங்கிருந்த ஊர் மக்கள் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையை பெரிதும் ரசித்து மகிழ்ந்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி