அரசுப் பள்ளிகளில் மாதவிடாய் சுகாதார மேலாண்மை - உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி தேவையான வசதிகளை உறுதி செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 15, 2026

அரசுப் பள்ளிகளில் மாதவிடாய் சுகாதார மேலாண்மை - உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி தேவையான வசதிகளை உறுதி செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!


அரசுப் பள்ளிகளில் மாதவிடாய் சுகாதார மேலாண்மை - உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி தேவையான வசதிகளை உறுதி செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

*பள்ளிகளில் மாதவிடாய் சுகாதாரம்-அரசு உத்தரவு.*

பள்ளிகளில் மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு.

பள்ளிகளில் உரிய நீர் இணைப்புடன் கூடிய, தனித்தனி பெண்கள் கழிப்பறைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பருவமடைதல், மாதவிடாய் சுகாதாரம், பிசிஓஎஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மாற்றுத்திறன் மாணவிகள் அணுகத்தக்கதாக, சோப்பு, நீர், கைகழுவும் வசதிகளுடன் கழிப்பறை வைத்திருக்க வேண்டும்.

பள்ளிகளில் மாணவிகளுக்கு மறுசுழற்சி செய்யத்தக்க இலவச நாப்கின்கள் வழங்கப்பட வேண்டும்.

பள்ளிகளில் அனைத்து வசதிகளும் முறையாக செயல்படுவதை தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும்-பள்ளிக் கல்வித் துறை.

 DSE - Menstrual Hygiene-Proceedings

👇👇👇👇

Download here

1 comment:

  1. முதலில் ஒழுக்கத்தை உறுதி செய்யுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி