SCERT / DIET சார்பில், ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) -டிசம்பர் 2026 நேரடிப் பயிற்சி வகுப்பிற்கான சிறப்பு அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 21, 2026

SCERT / DIET சார்பில், ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) -டிசம்பர் 2026 நேரடிப் பயிற்சி வகுப்பிற்கான சிறப்பு அறிவிப்பு!

Special TET 2026 Offline Course Registration Form

ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) -டிசம்பர் 2026 நேரடிப் பயிற்சி வகுப்பிற்கான சிறப்பு அறிவிப்பு!

 அன்பார்ந்த ஆசிரியர்களுக்கு, வணக்கம்!


SCERT / DIET சார்பில், டிசம்பர் 2026-இல் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்விற்கான (TET) தாள் 1 (Paper 1) மற்றும் தாள் 2 (Paper 2) பயிற்சி வகுப்புகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


கடந்த சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வின்போது நடத்தப்பட்ட பயிற்சி வகுப்புகளிலிருந்து மாறுபட்டு, இம்முறை பயிற்சி வகுப்புகள் உங்கள் மாவட்டத்திலேயே, வார இறுதி நாட்களில் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்) நடத்தப்படும்.


பயிற்சி வகுப்புகள் நடைபெறும் இடம்:

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (DIET) அல்லது முதன்மைக் கல்வி அலுவலர் (CEO) அலுவலகத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். அனைத்து வகுப்புகளும் DIET விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர் கல்விப் புலத்துடன் தொடர்புடைய பேராசிரியர்களால் நடத்தப்படும்.


பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் ஆசிரியர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐப் பூர்த்தி செய்து தங்களது பதிவை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


📝 Google Form – பதிவு செய்ய:

https://forms.gle/Pd1UxgV7FK61Yw4BA


பயிற்சி வகுப்புகளுக்கான கால அட்டவணை மற்றும் இதர விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Telegram குழுவின் வாயிலாகப் பகிரப்படும்.


📢 Telegram குழுவில் இணைய:

https://t.me/scertspecialtet


ஆசிரியர்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ஆசிரியர் தகுதித் தேர்விற்குத் திட்டமிட்டுத் தயாராகுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


நன்றி!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி