TET தேர்வில் தேர்ச்சி பெற்ற 2500 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பணிமாறுதல் வழங்க வேண்டும்: அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 15, 2026

TET தேர்வில் தேர்ச்சி பெற்ற 2500 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பணிமாறுதல் வழங்க வேண்டும்: அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை

 ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்ற 2500 ஆசிரியர் பயிற்றுநர்களை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் வழங்க அரசு உத்தரவிட வேண்டும்,’ என தமிழ்நாடு அனைத்து அலுவலர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

 2002ல் அனைவருக்கும் கல்வி இயக்கம் 3360 ஆசிரியர் பயிற்றுநர்களுடன் தொடங்கப்பட்டது. இவர்கள் செயல்வழி கற்றலில் பயிற்சி அளிப்பதால் மாணவ, மாணவிகளின் கல்வி மட்டுமின்றி தனித்திறன்களும் மேம்படுகின்றன.

 2006 முதல் 2012 வரை தொடர்ச்சியாக 7 ஆண்டுகள் தலா 500 ஆசிரியர் பயிற்றுநர்கள் வீதம், 3500 பேர் பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் செய்யப்பட்டனர். 2010க்கு பின் ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்கள் புதிதாக நியமிக்கவும், 2012ல் இருந்து பள்ளிக்கு அனுப்பும் நடைமுறையும் நிறுத்தப்பட்டது.

 இந்நிலையில் ஆசிரியர் தகுதித்தேர்வு, சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு என இரண்டிலும் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் பயிற்றுநர்கள் 3 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் 2 ஆயிரத்து 500 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் செய்து பள்ளிகளுக்கு அனுப்ப பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், முதல்வரின் தனிப்பிரிவிற்கு தமிழ்நாடு அனைத்து அலுவலர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் சங்கம் சார்பில் கடிதம் அனுப்பி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 இது குறித்து சங்க மாநிலத் தலைவர் ராஜ்குமார் கூறியதாவது:

 மாணவர்களின் திறனை கண்டறிந்து, சமூகத்தில் உயர்நிலை பெற அவர்களை தகுதி படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. அதிலும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பயிற்றுநர்களாக இருந்து கற்பித்தல் பணிகளில் ஈடுபட்ட அனுபவம் பெற்றதால் கற்பித்தல் திறன் மேம்பட்டிருக்கும். எனவே ஆசிரியர் தகுதித்தேர்வு, கூடுதல் தகுதித்தேர்வில் தேர்ச்சி அடைந்த 2 ஆயிரத்து ஆசிரியர் பயிற்றுநர்களை உடனடியாக உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் வழங்க வேண்டும். இதன் மூலம் மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் மேம்படும். இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், முதல்வரின் தனிப்பிரிவிற்கு கோரிக்கை விளக்கக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி