ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண்.01/2026, நாள் 13.022026-இல் அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகளில் 0109.2025 முதல் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (Special TNTET.1) தாள்-I 04.07.2026 அன்றும். தாள்-II 05.07.2026 அன்றும் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative Answer Key) Objection Tracker www.trb.tn.gov.in இணையதளத்தில் 15.07.2026 அன்று வெளியிடப்பட்டு, தேர்வர்களின் அனைத்து ஆட்சேபணைகளும் பாடவாரியாக வல்லுநர்குழு கொண்டு முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன.
தற்போது, அரசாணை (நிலை) எண். 23 பள்ளிக் கல்வித் (TRB) துறை நாள்:28.012026 மற்றும் அரசாணை (நிலை) எண். 46 பள்ளிக் கல்வித் (TRB) துறை நாள்:25.02.2026-இல் தெரிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் OMR விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் இறுதி விடைக்குறிப்புடன் (Final Answer Key) இன்று வெளியிடப்படுகிறது.
இத்தேர்வில் தகுதிப் பெற்ற தேர்வர்கள் 5 தினங்களில் தங்களது தகுதிச் சான்றிதழை (e-certificate) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தின் வாயிலாகப் (www.trb.tn.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், புதுச்சேரி அரசு, பள்ளிக்கல்வித்துறை செயலரின் நேர்முக கடித எண்.M. 17076 (76)/33/2026. Academic Wing. JD/DSE, 11.05.2026-தேர்வர்களுக்கு அவர்களது மதிப்பெண்கள் மட்டும் இத்தேர்வு வாரியத்தால் வெளியிடப்படுகிறது. இத்தேர்வர்களின் ஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்றிதழ் புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித்துறையால் வழங்கப்படும்.

UG TRB NOTIFICATION WILL BE PUBLISH SOON. DATE OF EXAM DECEMBER THIRD WEEK.
ReplyDeleteUG TRB CHEMISTRY MATERIAL AVAILABLE, TAMIL ELIGIBITY MATERIAL, TEST SERIES ALSO AVAILABLE. UG TRB I BATCH OFFLINE CLASSES FINISHED NOW TEST SERIES GOING ON. CONTACT 9884678645
PROFESSIONAL CHEMISTRY INSTITUTE AT NAGERCOIL