பண்டிகை முன்பணம் வழங்க மறுப்பு தமிழக முதல்வர் தலையிட அரசு ஊழியர் சங்கம் வேண்டுகோள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2013

பண்டிகை முன்பணம் வழங்க மறுப்பு தமிழக முதல்வர் தலையிட அரசு ஊழியர் சங்கம் வேண்டுகோள்.

தமிழக அரசு ஊழியர் களுக்கு பண்டிகை முன்பணம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படுமென தமிழக முதல்வர் கடந்த ஆண்டு தெரிவித்தார்.அதனடிப்படையில் பல பண்டிகை களுக்கு ஏற்கனவே ரூ.5 ஆயிரம் முன்பணம் வழங்கப் பட்டுள்ளது.ஆனால் தற்போது
போதுமான பணம் ஒதுக்கீடு இல்லை எனக் காரணம் கூறி கருவூலங்களில் பல துறை அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்பணம் வழங்க மறுத்து வருகின்றனர். இதுதொடர்பாக அரசுத்துறைகளின் தலைமை அலுவலர்களை தொடர்பு கொண்டால் போதுமான நிதி ஒதுக்கீடு இல்லை எனதெரிவித்து வருகின்றனர். இத னால் அரசுஊழியர்கள் மிகுந்த அதிருப்தியும், வேதனையும் அடைந்துள்ளனர். முன்பணத்திற்கு போதுமான நிதி வழங்க வேண்டியது அரசின் கடமை என்பதை வலியுறுத்துகிறோம்.எனவே, தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலைமையில் தமிழக முதல்வர் தலையிட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் முன்பணம் வழங்கிட ஆவன செய்து உதவுமாறு கேட்டுக் கொள் கிறோம்.மேற்கண்டவாறு சங் கத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வி, பொதுச்செயலாளர் இரா.பால சுப்பிரமணியன் ஆகியோர் அறிக்கை ஒன்றில் கூறியுள் ளனர்.

1 comment:

  1. c.m mam thula matum ila tet resultkum unga great wordskaka tn tet eluthuna 6 lacs candidates waiting mam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி