TRB முடிவு : ஆசிரியர் தகுதித் தேர்வு இந்தாண்டு இல்லை-Dinakaran News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 17, 2014

TRB முடிவு : ஆசிரியர் தகுதித் தேர்வு இந்தாண்டு இல்லை-Dinakaran News


ஆசிரியர் தேர்வு வாரியம், தகுதித் தேர்வுகளை நடத்தும் போதெல்லாம் நீதிமன்ற வழக்குகளை சந்திக்க வேண்டியுள்ளதால், இந்த ஆண்டுக்கான தகுதித் தேர்வை நடத்துவதில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று கடந்த 2010ம் ஆண்டு அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, 2011ம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.இதுவரை 3 தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. தொடக்கத்தில் நடந்த தகுதித் தேர்வில் போதிய ஆசிரியர்கள் தேர்ச்சி பெறாத காரணத்தால் 2011ம் ஆண்டில் 2 முறை தேர்வுகள் நடத்தப்பட்டது. இதையும் சேர்த்தால் 4 தேர்வுகள் வரை நடந்துள்ளது. ஒவ்வொரு முறை தகுதித் தேர்வு நடந்து முடிந்ததும், கீ&ஆன்சர் வெளியான நாளில் இருந்தே தேர்வு எழுதியோர் தரப்பில் பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வந்துள்ளனர்.அந்த வழக்குகளை முடித்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் ஆசிரியர் தேர்வு வாரியம் பல பிரச்னைகளை சந்தித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு நடந்த தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறை கொண்டு வரப்பட்டது. இந்த முறையை எதிர்த்து பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்,வெயிட்டேஜ் முறையை ரத்து செய்து விட்டு பாதிப்பில்லாத வகையில் புதிய அணுகுமுறையுடன் கூடிய வெயிட்டேஜ் முறையை கொண்டு வரவேண்டும் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து, பணி நியமனத்துக்கு 100 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டது, இதற்காக பலர் மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இப்படி பல பிரச்னை களை கடந்து வந்த நிலை யில் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடக்க வேண்டிய தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்த பிறகே தகுதித் தேர்வை நடத்துவது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அதனால் இப்போதைக்கு தகுதித் தேர்வு நடக்காது என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

7 comments:

  1. திரு, விஜயகுமார் சார், ஆ.தி. பள்ளி நியமனத்திற்கான வழக்கு பற்றி விளக்கம் தாருங்கள்,
    அந்த வழக்கு எப்பொழுது விசாரணைக்கு வருகிறது, எப்பொழுது தீர்ப்பு வரும் .

    ReplyDelete
  2. 2013 - 2014 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுமா.........?

    ReplyDelete
  3. ஆசிரியர் தொடர்பான வழக்குகளை வேறு மாநிலங்களில் நடத்த வேண்டும். தமிழகத்தில் நியாயமான தீர்ப்பு கிடைக்காது. கர்நாடகத்தில் தான்!!!!!!!!!!!!

    ReplyDelete
  4. i will file case all tet case postpond to other state ......................................

    ReplyDelete
  5. All tet paper 1 and 2 un selected above 90 candidates madurai lawyer lajapathi roy file the case against go 71 to supremecourt and file the case and record the case number .so all candidates come to join the team,to take the posting court order.pls come.contact-----9843641047--lawyer louis,9843251788---------lajapathi sir,9942126524---kannan candidate filethe case agaist supreme court.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி