தலைமையாசிரியர் பதவி உயர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 8, 2012

தலைமையாசிரியர் பதவி உயர்வு

உயர்நிலைப்பள்ளிதலைமையாசிரியர் பதவி உயர்வில், இடை நிலை ஆசிரியர்கள் பாதிப்பதால், அவர்களுக்கும் பதவி உயர்வு வழங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பதவி உயர்வுமூலம்பட்டதாரி ஆசிரியர்களாகும், இடைநிலை ஆசிரியர்கள், பணி மூப்பு படி, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாகின்றனர். இதில், நேரடி பட்டதாரி ஆசிரியருக்கும், இடைநிலை ஆசிரியராக இருந்து, பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கும் சம நிலை உள்ளது. தற்போது, அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்களாக, பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் 2002 முதல் பள்ளி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட்டனர். உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு போது, ஆசிரியர் பயிற்றுனர்களாக இருந்து, பட்டதாரி ஆசிரியர்களாக வந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதனால் இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கின்றனர்.இதன் மீது, பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து, ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு 50 , இடைநிலைஆசிரியர்களுக்கு 50 சதவீதம் என, ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி